இந்தியாவில் புதிதாக 23,161 பேருக்கு கொரோனா பாதிப்பு.. கேரளாவில் 13217 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 23,161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 33,812,559 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் தினமும் 40 ஆயிரம் கேஸ்கள் பதிவான நிலையில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக தினசரி கேஸ்கள் 25 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 448,846 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்தியாவில் மொத்தமாக 33,086,025 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். 277,688 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 8,944 பேர் மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார்கள். 241 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,56,657 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு புதிதாக 2696 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,39,166 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 63,77,954 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 35955 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் தொடர்ந்து 1700க்கும் கீழ் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகள் அமலில் இருந்தாலும் மூன்றாம் ஆலைக்கான அறிகுறிகள் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,66,964 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 35,627 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,14,291 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 17,046 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,77,225பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 636 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 37,811பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,27,029 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 12,356 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. கேரளாவில் தொடர்ந்து 12 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. கேரளாவில் கொரோனா காரணமாக 47,07,909 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 13217 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் ஆக்டிவ் நோயாளிகள் அதிகம் உள்ளனர். அங்கு இதுவரை 25,303 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 45,40,866 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 1,41,211 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+