Omicron: இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை எப்போது முடிவுக்கு வரும்?.. சயின்டிஸ்ட் கொடுத்த ஹேப்பி நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜனவரி முடிவில் உச்சத்தை தொடும் என்று கூறிய மூத்த மருத்துவ நிபுணர், கொரோனா 3ஆவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை தோன்ற காரணம் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட். இந்தியாவில் 4,868 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் நேற்று ஒரே நாளில் 407 பேருக்கு புதிதாக ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் 1,281 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் ராஜஸ்தானில் 645 பேருக்கும் டெல்லியில் 546 பேருக்கும் கர்நாடகாவில் 479 பேருக்கும் கேரளாவில் 350 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் தமிழகத்தில் இதுவரை 185 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓமிக்ரான் வேகமாக பரவல்

ஓமிக்ரான் வேகமாக பரவல்

ஓமிக்ரான் வேகமாக பரவி வந்தாலும் டெல்டா போல் சீரியஸ் தன்மை இல்லாதது சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது. எனினும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் டேட்டா விஞ்ஞானியும் தொற்றுநோய் துறையியல் நிபுணருமான பேராசிரியர் ப்ராமர் முகர்ஜி இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் எப்போது உச்சம்

இந்தியாவில் எப்போது உச்சம்

அவர் கூறுகையில் இந்தியாவில் நாளொன்றுக்கு 2 லட்சம் பேருக்கு தினசரி கொரோனா பாதிக்கிறது. அதில் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன. அடுத்த 10 நாட்களில் இந்த மாநிலங்களில் தொற்று குறையும். அடுத்த 7 நாட்களில் மற்ற சில மாநிலங்களில் கொரோனா உச்சத்தை தொடும் என நம்புகிறேன்.

கொரோனா உச்சம்

கொரோனா உச்சம்

ஜனவரியில் இந்தியாவில் கொரோனா உச்சம் பெறும். ஓமிக்ரான் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அதே வேளையில் இது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவும் முடியாது என்பதையும் குறிக்கிறது. ஓமிக்ரானால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் தரவு மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது அலையின் போது இருந்த நிலை தற்போது 3ஆவது அலையில் மாறியுள்ளது. அதற்கு காரணம் தடுப்பூசிதான்.

Recommended Video

    Cyprus நாட்டில் பரவும் புதிய Variant Coronavirus.. Deltacron குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
    இந்தியாவில் கொரோனா உச்சம்

    இந்தியாவில் கொரோனா உச்சம்

    ஓமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் தடுப்பூசி போடாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மக்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். எனவே ஜனவரி முடிவில் இந்தியாவில் கொரோனா உச்சத்தை பெறும் அது பிப்ரவரியில் முடிந்துவிடும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+