புர்கா அணிந்து.. மனைவியின் பாஸ்போர்ட், கொரோனா நெகட்டிவ் சான்றுடன் விமான நிலையம் வந்த நோயாளி கைது
டெல்லி: விமானத்தில் பயணம் செய்ய பர்தா அணிந்து கொண்டு மனைவியின் பாஸ்போர்ட்டுடன் வந்த கொரோனா உறுதி செய்யப்பட்ட இந்தோனேஷியா நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் பயணம் செய்ய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து டெர்னேட் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு ஒரு பெண் வந்திருந்தார்.
அப்போது பர்தா அணிந்திருந்த அவரின் பாஸ்போர்ட்டையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் பார்த்த அதிகாரிகள் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதித்தனர்.

பாதி வழியில்
இதையடுத்து விமானத்தில் பாதி வழியில் பாத்ரூமுக்கு சென்ற அந்த பெண் திடீரென பேன்ட் சர்ட் அணிந்து கொண்டு வெளியே வந்துள்ளார். இதையெல்லாம் அந்த விமானத்தின் ஊழியர் ஒருவர் பார்த்துவிட்டு போலீஸிடம் போன் செய்தார்.

விமானம்
அப்போது அவரிடம் போலீஸார் விசாரிக்கையில் விமானத்தில் பயணம் செய்வதற்காக மனைவியின் பாஸ்போர்ட்டுடன் பர்தா அணிந்து கொண்டு அவருடைய கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வந்துள்ளார். இதையடுத்து அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என வந்தது.

பிபிஇ கிட்
பின்னர் அவருக்கு மருத்துவ பாதுகாப்பு உடையை அணிய வைத்து அவரை வெளியே அழைத்து சென்ற போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டனர். 14 நாட்கள் கழித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

டெல்டா பிளஸ் வைரஸ்
உலக நாடுகள் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தோனேஷியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் விமானத்தில் பயணம் செய்ய கொரோனா இருப்பது தெரிந்தும் ஒரு நபர் ஏமாற்றியுள்ளார் என்றால் இவரது பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications