டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் லாக்டவுனா?.. மிரட்டும் இந்த 2 மாநிலங்கள்.. பெருகும் தொற்று.. விழிபிதுங்கும் அரசுகள்

கேரளா மிசோரத்தில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் விகிதம், நாடு முழுவதும் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், கேரளா மற்றும் மிசோரம் மாநிலங்களில் தொடர்ந்து பயமுறுத்தும் வகையில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் முழு லாக்டவுன் போடுவதான் ஒரே தீர்வாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவிலேயே தொற்று பாதிப்பில் அசாம் மிரட்டி கொண்டிருக்கிறது.. கேரளா, அசாம் மாநிலங்களில் விரைவில் லாக்டவுன் போடப்படுமா? லாக்டவுன்தான் இதற்கு தீர்வா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Covid Positivity Rates of Kerala, Mizoram Too High? Lockdown Might be the Only Solution

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது.. இதனால் மத்திய சுகாதாரத்துறை இதற்காகவே ஒரு குழுவை அனுப்பி வைத்து, தொற்றை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டது.

நேற்றைய தினம் 1,03,871 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.. அதில், புதிதாக 15,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...கடந்த 2 நாட்களாகவே 12 ஆயிரத்திற்கும் கீழ் தொற்று பதிவாகி வந்த நிலையில் நேற்று தொற்று எண்ணிக்கை 12 ஆயிரம் கடந்துவிட்டது.. இதனால், நோய் தொற்று நேற்றைவிட 3,753 எண்ணிக்கையில் இருந்து அதிகரித்து காணப்படுகிறது.

கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 25,087 பேர் உயிரிழந்த நிலையில், 45,12,662 பேர் குணமாகி இருந்தாலும், தொற்று வீதம் அளவு அதிகமாகவே உயர்ந்து வருவது கவலையை தந்துள்ளது. அசாமை எடுத்து கொண்டால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆக அதிகரித்து காணப்படுகிறது.. ஒட்டுமொத்தமாக இந்தியாவை பொறுத்தவரை, ஏப்ரல்-மே மாதங்களில் 2வது அலையின் உச்சத்துடன் ஒப்பிடுகையில் இந்த முறை இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.

எனினும், மொத்த அதிக உயிரிழப்பு வீதமானது அபாயத்தை தந்து வருகிறது.. கடந்த 14-நாட்களில் கேரளாவில் 16% பாசிட்டிவ் கேஸ்கள் உயர்ந்துள்ளன.. இதனால் அந்த மாநிலத்தில் லாக்டவுன் போடப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.. மிசோரத்தை எடுத்து கொண்டால், 17% உயர்ந்துள்ளது.. இப்போதைக்கு இந்த 2 மாநிலங்களுமே தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் ஆகும்.

சிக்கிம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் தலா ஒவ்வொன்றும் 5% முதல் 8% வரை தொற்று அபாயம் பெருகி உள்ளது. அதேபோல, பீகார், உபி., டெல்லி, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தற்போது நோய்த்தொற்று பெருகி உள்ளதாக தெரிகிறது.. கோவா, கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் மே மாதத்தின் முதல் பாதியில் 42% வரை பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகி உள்ளன.. மற்ற சுற்றுலா தலங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், கோவா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் கடந்த 2 வாரங்களில் குறைந்துள்ளது.

 தப்பிக்கவே முடியாது.. அளவுக்கு மீறி கடன் கொடுத்து 42 நாடுகளை அடிமையாக்கிய சீனா.. திட்டம் என்ன? தப்பிக்கவே முடியாது.. அளவுக்கு மீறி கடன் கொடுத்து 42 நாடுகளை அடிமையாக்கிய சீனா.. திட்டம் என்ன?

கொரோனா பாதிப்புடன் எண்ணிக்கையில் உள்ளவர்களின் எண்ணிக்கைய ஆக்டிவ் கேஸ்கள் என்று அழைப்பார்கள்.. அந்த எண்ணிக்கையில்தான் கொரோனா கேஸ்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.. அந்த வகையில் பார்த்தால், கேரளா 1.4 லட்சம் ஆக்டிவ் கேஸ்கள் முன்னணில் உள்ளது.. அடுத்து மகாராஷ்டிராவில் 36,000 கேஸ்கள், தமிழ்நாட்டில் 17,200, மிசோரம் 16,015, கர்நாடகா 12,500, ஆந்திரா 11,700 கேஸ்கள் பதிவாகி உள்ளன... இவைகள்தான் இந்தியாவிலேயே நாட்டில் அதிகம் உள்ள 5 மாநிலங்கள் இவை. மற்ற மாநிலங்களில் குறைவாக அதாவது 1000-லிருந்து 7,000 வரையே கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன..

English summary
Covid Positivity Rates of Kerala, Mizoram Too High? Lockdown Might be the Only Solution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X