சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. இவர்களுக்கு மட்டும் விலக்கு.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில். வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியா ஓமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், . வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிளம்பும் முன்
புதிய வழிகாட்டுதல்கள் படி பயணத்தைத் தொடங்கும் முன்னரே ஆன்லைனில் ஒருவர் தங்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பிசிஆர் சோதனை விமானம் கிளம்ப 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சான்றிதழ் பொய்யாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர கொரோனா பாதிப்பு மோசமாக உள்ள நாடுகளில் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

தனிமை கட்டாயம்
ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவில் விமான நிலையத்திலேயே கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும். கொரோனா முடிவுகள் நெகடிவ் என வந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் தனிமை கட்டாயம். தேவைப்பட்டால், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் டிக்கெட் உடனேயே வழங்கப்படும்.

கொரோனா நெக்டிவ் சான்றிதழ்
கொரோனா நெக்டிவ் சான்றிதழை அளிக்கும் பயணிகளை மட்டும் விமானத்தில் ஏற விமான நிறுவனங்கள் அனுமதிக்கும். அனைத்து பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்தின் போது அனைத்து பயணிகளும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். பயணத்தின் போது யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால், தகுந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆபத்தான நாடுகள்
ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அவர்கள் கொரோனா நெகட்டிவ் என்றாலும் கூட 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். அதன் பின்னர் மீண்டும் முறை கொரோனா சோதனை செய்ய வேண்டும். பாசிட்டிவ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும், அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதர நாடுகள்
இதர நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% பேருக்கு ரேண்டம் முறையில் ஏர்போர்ட்டில் கொரோனாா பரிசோதனை செய்யப்படும். இதர பயணிகள் வீடுகளில் தனிமையில் இருந்துவிட்டு, 8ஆம் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 8 நாட்களுக்கு பிறகு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என்ற முடிவு வரும் வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமையில் இருக்க வேண்டும். இதர நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% பேருக்கு ரேண்டம் முறையில் ஏர்போர்ட்டில் கொரோனாா பரிசோதனை செய்யப்படும். இதர பயணிகள் வீடுகளில் தனிமையில் இருந்துவிட்டு, 8ஆம் நாளிலும், 15ஆம் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதாவது 15 நாட்களில் இரு முறையும் கொரோனா நெகடிவ் என்ற முடிவுகள் வரும் வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமையில் இருக்க வேண்டும்.

யாருக்கு விலக்கு
கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இதே கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அதேநேரம் 5 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு இதுபோன்ற கொரோனா நடைமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனிமைப்படுத்தும் நேரத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அறிகுறிகள் தெரிந்தால், அவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications