துணை ஜனாதிபதி தேர்தல்! சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றது எப்படி? மாறி வாக்களித்த கருப்பு ஆடுகள்! காங்.ஷாக்
டெல்லி: இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது உயரிய அரசியலமைப்பு பதவியான துணை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இன்று மாலை வெளியாகின.
எதிர்க்கட்சி வேட்பாளர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 767. இதில் 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி மற்றும் ராஜ்யசபா பொதுச்செயலாளர் பி.சி. மோடி தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல்
பெரும்பான்மை பெறுவதற்கு 377 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், ரெட்டி 300 வாக்குகளும் பெற்றதாக மோடி அறிவித்தார். மக்களவை மற்றும் ராஜ்யசபாவின் தற்போதைய பலத்தின் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களிடமிருந்து ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள் ஆதரவுடன், அவருக்கு 438 வாக்குகள் கிடைத்திருக்கும். சுயேச்சை மற்றும் பிற நடுநிலையான எம்.பி.க்களின் வாக்குகளையும் சேர்த்தால் 449 வாக்குகள் கிடைத்திருக்கும்.
சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள்
அதே சமயம், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றதால், ரெட்டிக்கு 315 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி முடிவுகளில் ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். ரெட்டி எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
செல்லாத 15 வாக்குகளும் எதிர்க்கட்சியில் இருந்து வந்திருந்தாலும், ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட சில வாக்குகள் அதிகம் பெற்றிருப்பது, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் காட்டுகிறது. முக்கியமாக இந்தியா கூட்டணியில் சில கருப்பு ஆடுகள் இருப்பதை உறுதி செய்கின்றன. அதாவது இந்தியா கூட்டணிக்குள் பாஜகவிற்கு ஆதரவாக சிலர் இருப்பதை உறுதி செய்கிறது.
சி.பி. ராதாகிருஷ்ணன் வென்றது எப்படி?
பி.ஜே.டி மற்றும் பி.ஆர்.எஸ் போன்ற கட்சிகள் (மொத்தம் 11 வாக்குகள்) தேர்தலில் இருந்து விலகியிருந்தன. இந்தியா கூட்டணிக்கு கடந்த குடியரசு துணை தலைவர் தேர்தலை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். கடந்த 2022- ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி வேட்பாளர் 26 சதவீதம் வாக்குகளை பெற்றார். இம்முறை 40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 துணை ஜனாதிபதி தேர்தலிலும், குறிப்பாக ஐக்கிய எதிர்க்கட்சிக்குள் பல குறுக்கு வாக்குப் பதிவுகள் இருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜகதீப் தன்கர் 528 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இது 30 ஆண்டுகளுக்கும் மேலான உச்சபட்ச வெற்றியாகும். அவர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல்களில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும். கட்சித் தலைவர்களின் கட்டளைகளுக்கு எம்.பி.க்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல. இருப்பினும், இத்தகைய குறுக்கு வாக்குப் பதிவுகள் எதிர்க்கட்சிகளுக்குள் உள்ள பிளவுகளை வெளிப்படுத்துகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications