காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி
டெல்லி: இந்தியா கூட்டணி தொடங்கி இப்போது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அனைவரும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதற்காகவே ஒன்று கூடினோம். ஆனால், கேரளா மாநிலத்தில் ஒரு தெளிவற்ற, குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. அங்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி போன்றவர்கள் எங்களுக்கு பா.ஜ.க.வுடன் ஏதோ ஒரு வகையான கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டும் அணுகுமுறையும் இப்படித்தான் இருக்கும் என்றால், நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதன் நோக்கம் தான் என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களவை எம்பியுமான ஜான் பிரிட்டோ கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை, மனநிலை மற்றும் நடத்தை குறித்து எங்களுக்கு கடுமையான அதிருப்திகள் உள்ளன.
இந்தியா கூட்டணி தொடங்கி இப்போது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அனைவரும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதற்காகவே ஒன்று கூடினோம். ஆனால், கேரளா மாநிலத்தில் ஒரு தெளிவற்ற, குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. அங்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி போன்றவர்கள் எங்களுக்கு பா.ஜ.க.வுடன் ஏதோ ஒரு வகையான கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டும் அணுகுமுறையும் இப்படித்தான் இருக்கும் என்றால், நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதன் நோக்கம் தான் என்ன? மேலும், பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதில் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியைப் பற்றி காங்கிரஸ் கட்சியிடமிருந்து நாங்கள் எந்தவொரு சான்றிதழையும் பெற விரும்பவில்லை.
ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எங்களுடைய ஆதரவு இருப்பதால்தான் அவர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களாக நீடிக்க முடிகிறது. காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறை குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
கேரளாவில் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்து வந்தார்கள் "மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் சிறையில் தள்ளுகிறது. ஆனால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்தும் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? அப்படியென்றால் பா.ஜ.க-வோடு சிபிஎம் ஏதோ ஒரு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறதா?" என்பது காங்கிரஸின் வாதமாக இருந்தது. இது பெரிய அளவில் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
பா.ஜ.க-வின் கொள்கைகளைத் தீவிரமாக, தத்துவார்த்த ரீதியாக எதிர்க்கும் இடதுசாரிகளை'பா.ஜ.க-வின் பி-டீம்' (B-Team) என்று காங்கிரஸ் விமர்சிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'இந்தியா' கூட்டணியின் பிரதான நோக்கமே பா.ஜ.க-வை எதிர்ப்பதுதான் எனும் போது, தங்களுக்குள் இப்படி மாறி மாறிச் சேற்றை வாரி இறைத்துக் கொண்டால், அது ஒட்டுமொத்தக் கூட்டணியின் நம்பகத்தன்மையையும் தேசிய அளவில் பலவீனப்படுத்தும் என்பது கம்யூனிஸ்டுகளின் வாதமாக உள்ளது. ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய திமுகவுமே காங்கிரஸின் நிலைப்பாடு பிடிக்காமல் வெளியேறியது. மற்ற கட்சிகளுமே கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிரக்கிறார்கள். காங்கிரஸ் செய்யும் அரசியல் பாஜகவிற்கு சாதகமாக முடிகிறது என்பதே அவர்களின் வாதமாக உள்ளது. மம்தா பானர்ஜி கூட முன்பு காங்கிரஸ் கட்சியினை கடுமையான விமர்சித்து இருந்தார். பல மாநிலங்களில் மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகின்றன. இதனால் இந்தியா கூட்டணியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications