CUET PG 2025 Results: கியூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட்களை பார்ப்பது எப்படி?
டெல்லி: கியூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமை, 157 பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான CUET முதுகலை தேர்வு முடிவுகளை நேற்று (மே 6) வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 191 மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

கியூட் முதுநிலை தேர்வு
அதன்படி வரும் கல்வியாண்டில் (2025-26) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடந்தது. நாடு முழுவதும் 6,54,019 இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
கியூட் முதுநிலை தேர்வுகள் நிறைவடைந்து கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேர்வின் தற்காலிக விடைக்குறிப்புக்கு எதிராக ஆட்சேபனைகள் எழுந்ததைத் தொடர்ந்து, CUET PG 2025 இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியீடு
தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட சவால்களை பாட வல்லுநர்கள் ஆய்வு செய்து, ஏதேனும் ஆட்சேபனைகள் சரியாக இருந்தால் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் இறுதி விடைக்குறிப்புகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
அதைத்தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA), கியூட் முதுகலை நுழைவுத் தேர்வு (CUET PG) 2025 முடிவுகளை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இப்போது தங்கள் மதிப்பெண் அட்டைகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான exams.nta.ac.in/CUET-PG இல் பார்க்கலாம்.
CUET PG 2025 ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?
CUET PG 2025 ஸ்கோர் கார்டை டவுன்லோடு செய்ய, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்:
1. CUET PG 2025 இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
2. CUET PG 2025 ஸ்கோர் கார்டு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் CUET PG விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு அல்லது பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
4. பாதுகாப்பு பின்னை உள்ளிட்டு Submit என்பதைக் கிளிக் செய்யவும்.
5. CUET PG மதிப்பெண் அட்டை 2025 டவுன்லோடு செய்யவும்.
-
அதிகாரிகள் கூட பாஸ் ஆக மாட்டாங்க! யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: மிக மிக கடினம் என தேர்வர்கள் வேதனை -
ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications