தங்கம், வெள்ளி விலை குறைக்க, பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய பாயிண்ட்.. கவனிச்சீங்களா
டெல்லி: இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம், வெள்ளி பொருட்களின் இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்து அறிவித்தார். தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 6 சதவிகிதம் ஆகவும் வைரத்திற்கு 6.4 சதவிகிதமாகவும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அது இடைக்கால பட்ஜெட்.. தற்போது லோக்சபா தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், தற்போதைய மோடி அரசு முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.

2024 லோக்சபா தேர்தல் முடிந்து பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு பின் மோடி 3.0 அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் தங்கம், வெள்ளி, வைரத்திற்கு இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 6 சதவிகிதம் ஆகவும் வைரத்திற்கு 6.4 சதவிகிதமாகவும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. தங்கம், வெள்ளிக்கு தற்போது இறக்குமதி வரி 15 சதவிகிதமாக உள்ள நிலையில் 6.4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக ஜூவல்லரி துறையில் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இறக்குமதி வரியை குறைத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால், நகை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications