வேகமெடுக்கும் கொரோனா.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த ஒரு நாள் பாதிப்பு! கொஞ்சம் பதட்டமாதான் இருக்கு!
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும் நிலையில் நேற்று பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்து நிலையில் இன்று 17 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.
சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வரும் சூழலில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 12000 என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 13 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது. இந்நிலையில்தான் இன்று கூட பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.

மீண்டும் உயர்வு
நேற்று முன்தினம் 12,249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்று 13 ஆயிரத்துக்கு மேலே அதாவது, 13 ஆயிரத்து 313 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 17 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 17 ஆயிரத்து 366 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை
கொரோனா காரணமாக 13 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13 ஆயிரத்து 29 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 49ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 88 ஆயிரத்து 284 பேர் கிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 196 கோடியோ 67 லட்சத்து 5 ஆயிரத்து 300 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 101 கோடியே 54 லட்சத்து 21 ஆயிரத்து 904 முதல் டோஸ் தடுப்பூசியும், 90 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 126 இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 4 கோடியே 17 லட்சத்து 13 ஆயிரத்து 270 டோஸ் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications