தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து! பிரதமர் மோடியை எதிர்த்த சீனாவுக்கு இந்தியா கடும் பதிலடி
டெல்லி: புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளார்.
திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா. இவர் 1959ம் ஆண்டில் சீனாவை விட்டு வெளியேறி வசித்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்தியாவின் தர்மசாலாவில் தலாய் லாமா வசித்து வருகிறார். இவரை இந்தியா உள்பட பல நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி
இந்நிலையில் ஜூன் 6ம் தேதி 87வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் டுவிட்டர் மூலமும் பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். டுவிட்டர் பதிவில், ‛‛ நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டு இருந்ததார்.

சீனா கடும் எதிர்ப்பு
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‛‛சீனாவிற்கு எதிரான பிரிவினை எண்ணம் கொண்ட 14 வது தலாய் லாமாவை இந்தியா புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் உள்ளது. திபெத் தொடர்பான விவகாரங்களில் சீனாவிற்கு அளித்துள்ள உறுதிமொழிகளின் கட்டுப்பாட்டுடன் இந்தியா நடக்க வேண்டும். திபெத் தொடர்பான சீனாவின் உள்பிரச்னைகளில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தலாய்லாமா மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் இடையிலான தொடர்பை அனைத்து வகைகளிலும் சீனா எதிர்க்கும்'' என கூறியிருந்தார்.

இந்தியா பதிலடி
சீனாவின் இந்த கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும் சீனாவின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தலாய் லாமா இந்தியாவில் கவுரவ விருந்தினராகவும், அதிக ஆதரவாளர்களை கொண்டவராகவும் உள்ளார் என்பது இந்திய அரசின் உறுதியான கொள்கை. அவரது பிறந்தநாளை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமானோர் கொண்டி வருகின்றனர். இந்தியாவில் அவரது மதம் ஆன்மிக நடவடிக்கைகளை மேற்கொள்ள சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இந்த சூழலில் தான் பிரதமர் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்ற சூழலில் பார்க்க வேண்டும்'' என்றார்.
Recommended Video

அமெரிக்காவும் வாழ்த்து
இதேபோல் தலாய் லாமாவிற்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில், "அமைதியை ஊக்குவிப்பதன் மூலமும், மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும், திபெத்திய மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறார். திபெத்திய மக்களின் குறைகளைத் தீர்க்க அகிம்சையின் மீதான அவரது நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன். இவருக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்'' எனக்கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனையும் சீனா கண்டித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications