"அப்பா உங்களை மிஸ் பண்றேன்”.. மகளின் ஒரே ஒரு மெசேஜ்! 14 மணி நேரம் பயணம் செய்து வந்த தந்தை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "அப்பா, உங்களை மிஸ் பண்றேன்" என்று மகள் அனுப்பிய ஒரு சாதாரண மெசேஜ், அடுத்த நாள் நெகிழ்ச்சியான சந்திப்பாக மாறியுள்ளது. மகள் தன்னை மிஸ் செய்வதாக கூறியதை தொடர்ந்து, 14 மணி நேரம் பயணம் செய்து அவரை நேரில் சந்தித்த தந்தையின் செயல் சமூக வலைத்தளங்களில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

எப்போதும் தந்தையின் அன்பும் பாசமும் தனித்துவமானது. அதுவும் பெண் குழந்தைகள் மீது தந்தை காட்டும் பாசம் எப்போதுமே ஸ்பெஷலானது. அதை காட்டும் வகையிலான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் கைவால்யா என்ற பெண் தனது தந்தை திடீரென தன்னை சந்திக்க வந்த சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

father daughter relationship offbeat

மிஸ் செய்கிறேன்

அதாவது முந்தைய நாள் இரவு இந்த பெம் தனது தந்தைக்கு மெசேஜ் செய்துள்ளார். அப்போது தந்தையை பார்க்க வேண்டும் என்பது போல இருப்பதாகவும் மிஸ் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.. இந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட்டு அவர் தூங்க போய்விட்டார். மறுநாள் காலையில் வழக்கம் போல தூங்கி எழுந்து கதவை திறந்தபோது அந்த பெண்ணுக்கு மிக பெரிய ஷாக்! கையில் பேக் ஒன்றுடன் தனது தந்தை வாசலில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அந்த பெண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார்.

மகளை சந்திப்பதற்காக அவரது தந்தை சுமார் 14 மணி நேரம் பயணம் செய்துள்ளார். மகளின் மெசேஜ்ஜை பார்த்தவுடன் அந்த தந்தை கிளம்பிவிட்டாராம். இரவு முழுக்க 14 மணி நேரம் பயணித்து, மகளை சந்திக்க வந்துள்ளார். தொடர்ந்து மகளுடன் வெறும் 8 மணி நேரம் மட்டுமே செலவிட்ட அவர், மீண்டும் 14 மணி நேரம் பயணம் செய்து திரும்பியுள்ளார். இதற்கிடையிலும் அவர் தனது வேலையையும் மற்றும் ஆபீஸ் கால்களையும் கவனித்துக் கொண்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

பல விஷயங்கள்

மகளுடன் இருந்த அந்த குறுகிய நேரத்திலும், அவர் பல விஷயங்களைச் செய்துள்ளார். மகளின் வீட்டில் இருந்த பாத்திரங்களை சுத்தம் செய்ததுடன், அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். மேலும், மகளுக்கு பிடித்த உணவையும் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் புறப்படுவதற்கு முன்பு, "எப்போதும் சந்தோஷமாக இரு.. நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.

மிஸ் யூ

ஒரு வார்த்தை மிஸ் யூ என சொன்னதற்காக தனது தந்தை இவ்வளவு தூரம் வந்ததை நினைத்து அந்த பெண் நெகிழ்ந்து போய் இருக்கிறார். ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவூட்டுவதற்காகவே அவர் வந்ததாக கூறியுள்ளார். அவர் மேலும், "நான் அப்பாவை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவர் வந்துவிட்டார். 14 மணி நேரம் பயணம் செய்து வந்து, ஒரு நாள் என்னுடன் இருந்து, நான் கேட்காமலேயே ஏகப்பட்ட சின்ன சின்ன விஷயங்களை செய்து கொடுத்தார்

மேலும், பெற்றோர் எப்போதும் தங்களது பிள்ளைகளுடன் இருப்பதாக வார்த்தைகளில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் அவர்கள் வந்து நிற்பதே, "நீ தனியாக இல்லை" என்பதை நினைவூட்ட போதுமானது" என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இது நெட்டிசன்கள் பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

நெட்டின்சன்கள்

நெட்டிசன் ஒருவர், "அப்பா என்றால் அப்பாதான்!" என்று ஒருவர் பதிவிட்டார். மற்றொருவர், "நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதும் என் அப்பா இதேபோல் செய்தார்" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்தார். இப்படி பலரும் அவரது செயலை பாராட்டி வருகிறார்கள். சொல்லாமல் புரிந்து கொண்டு, கேட்காமலேயே வந்து நிற்கும் பெற்றோரின் அன்புக்கு இந்த சம்பவம் ஒரு அழகான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+