டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாவூத் கூட்டாளி இக்பால் மிர்சியின் பண பரிவர்த்தனைகள்... சிக்கும் சென்னை வங்கி

Google Oneindia Tamil News

டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இக்பால் மிர்சியின் பண பரிவர்த்தனைகள் சென்னையை சேர்ந்த வங்கி ஒன்றின் மூலமாக நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த சென்னை வங்கி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இக்பால் மிர்சியின் ரூ2,100 கோடி பணம் சட்டவிரோதமாக துபாய் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dawood Aide Iqbal Mirchi’s financial transaction through Chennai bank?

இந்த விசாரணையின் ஒருபகுதியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இக்பால் மர்சி தொடர்புடைய நிறுவனங்களில் சனிக்கிழமையண்று சோதனை நடத்தினர். மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.

தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் மிர்சி விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் போலி கணக்குகளை தொடங்கி மிர்சியின் பணத்தை துபாய்க்கு அவர் மாற்ற உதவியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வங்கியும் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறது.

போட்டு கொடுத்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிகளுக்கு பறக்கும் போன்போட்டு கொடுத்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிகளுக்கு பறக்கும் போன்

ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேலுக்கும் மிர்சி குடும்பத்துக்குமான வர்த்தக தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவுகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாவூத்தின் கூட்டாளியான மிர்சி 2013-ம் ஆண்டு லண்டனில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A case has been registered against an associate of Iqbal Mirchi for illegally routing money to Dubai.The Chennai police registered the case against Mirchi's associate, Musharaf Merchant for opening fake accounts at a bank in Kilpauk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X