Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பண்டிகை காலம் நெருங்குவதால் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வரும் என பலர் காத்திருக்கிறார்கள்.

Dearness allowance hike for central government employees

மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படியை அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நவராத்திரிக்கு பிறகு அகவிலைப்படி உயரும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்த முறை அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இதனால் தற்போது 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும் என தெரிகிறது. அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும். ஒரு ஊழியரின் வருமானம் மாதத்திற்கு ரூ 50 ஆயிரம், அடிப்படை ஊதியம் ரூ 15 ஆயிரமாக இருந்தால் அவர் தற்போது 6300 ரூபாய் அகவிலைப்படியாக பெறுகிறார்.

இதே அகவிலைப்படி உயர்ந்தால் கூடுதலாக ரூ 450 அதிகரித்து ரூ 6,750 ஊதியம் அதிகரிக்கும். அகவிலைப்படி பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்த்தப்படுகிறது. பொதுவாக ஜனவரி, ஜூலை மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது.

அந்த வகையில் ஜூலை மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்ந்ததால் 42 சதவீதமாக இருந்தது. தற்போது மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயரும் என சொல்லப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கணக்கீட்டுக்கான ஃபார்முலாவை மத்திய அரசு மாற்றியமைத்தது.

அதன்படி அகவிலைப்படி சதவீதம் = ((AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களுக்கு -115.76)/115.76)x100. மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (AICPI) (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களுக்கு -126.33)/126.33)x100.

இந்த அகவிலைப்படி உயர்வானது நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் இடையே அறிவிக்கலாம் என தெரிகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டவுடன் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும் என கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+