டிசம்பர் 11ம் தேதியும், ராகுல் காந்தியும்.. 2வது முறையாக வீசிய அதிர்ஷ்டக் காற்று!
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டிசம்பர் 11-ஆம் தேதி மிகவும் ராசியான நாள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.
ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு தாமதமாகும் என்கிற போதிலும் ஓரளவுக்கு எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்று்ம சத்தீஸ்கர் ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவுள்ளது.

டிசம்பர் 11
தொடர் இழுபறிக்கு மத்தியில் இத்தகைய வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் படுகுஷியில் உள்ளனர். இதில் இன்னொரு சந்தோஷமும் அவர்களுக்கு அடங்கியுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நாள் கடந்த ஆண்டு டிசம்பர் 11.

அதிர்ஷ்டம்
அது போல் இந்த ஆண்டு 5 மாநிலகளின் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ஆம் தேதி வெளியாகி வருகிறது. அதில் 3 மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் கட்சி தோற்கடித்துவிட்டது. இதன் மூலம் ராகுலுக்கு டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் அதிர்ஷ்டமான நாள் என்பது தெரிகிறது.

கண்ணை குத்தி விட்டார்
அவர் அப்பதவியை ஏற்றுக் கொண்டது டிசம்பர் 16-ஆம் தேதியாகும். அவ்வாறு பொறுப்பேற்றவுடன் ராகுலின் முழு டார்கெட் பிரதமர் நரேந்திர மோடிதான். உண்மையில் சொல்ல போனால் பாஜகவை ராகுல் காந்தி அவர்களது விரலை கொண்டே கண்ணை குத்திவிட்டார்.

வட்டாரங்கள்
அதாவது காங்கிரஸ் மீது பாஜக கூறிய ஊழல் புகார்களை வைத்தே காங்கிரஸ் தலைவர்கள் வியூகம் வகித்து அக்கட்சியை தோற்கடித்தனர். இந்த வியூகத்தை காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரை தொடரும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ராகுலுக்கு 3 மாநில தேர்தல் வெற்றியை மக்கள் பரிசளித்துள்ளதை விட வேறு சிறந்த பரிசு என்னவாக இருக்க முடியும்?5 என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரங்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications