பூமிக்கு அடியில் "புதைந்திருக்கும்" மெகா மலை! இமயமலையை விட 4 மடங்கு பெரியதாம்! வியப்பில் ஆய்வாளர்கள்
டெல்லி: பூமியில் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பூமிக்கு அடியே எவரெஸ்ட்டை விடப் பல மடங்கு உயரமான சிகரங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் இப்போது மிகவும் உயரமான சிகரம் என்பது எவரெஸ்ட் சிகரம் என்பது அனைவருக்கும் தெரியும். பூமியில் இருந்து 8849 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. உலகெங்கும் இருக்கும் பல வீரர், வீராங்கனைகள் இந்த சிகரத்தை அடைய முயன்று வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க ஆய்வாளர்கள் பூமிக்கு அடியே இருக்கும் சிகரங்கள் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியே சிகரங்களா என ஷாக் ஆக வேண்டாம். அவர்கள் அப்படி என்ன தான் சொல்லியுள்ளனர் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உயரமான சிகரம்: எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான மலைகள் பூமியின் ஆழத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.. அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் வல்லுநர் குழு அண்டார்டிகாவில் ஆய்வு செய்யும் போது பூமிக்கு அடியில் 2,900 கிலோமீட்டர் ஆழத்தில் பூமியின் மையப்பகுதிக்கும் mantle பகுதிக்கும் இடையே இந்த வியக்கத்தக்கப் பெரிய மலைகளைக் கண்டறிந்துள்ளனர். இவை மர்மமாகவே இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலத்தடி மலைத்தொடர்கள் இதுவரை ultra-low velocity zonesகளாக இருந்ததால் ஆய்வாளர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அங்கே உருவான மெல்லிய நில அதிர்வுகள் காரணமாகவே இந்த மலைத்தொடர்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
மிகப் பெரியது: எவரெஸ்ட் சிகரம் 8.8 கிமீ உயரத்தில் இருக்கும் நிலையில், இந்த பெரிய மலைத்தொடர்கள் 38 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "அண்டார்டிகாவில் இருந்து நில அதிர்வுகளை ஆய்வு செய்து பார்த்த போது கோர்-மேண்டில் எல்லையில் எல்லா இடங்களிலும் மலைத்தொடர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்தோம்.

இதன் அடர்த்தி சில கிலோமீட்டர்கள் முதல் 10 கிலோமீட்டர்கள் வரை மாறுபட்டு இருக்கிறது. சில இடங்களில் இது எவரெஸ்ட் சிகரத்தை விட 5 மடங்கு உயரமாகவும் இருக்கிறது" என்று கூறுகின்றனர். மேலும், இந்த மர்ம மலைச் சிகரங்கள் உருவாகக் காரணத்தை வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். பூமியின் உட்புறத்தில் கடல் க்ரஸ்ட் உருவானபோது இந்த மலைத்தொடர்கள் உருவாகியிருக்கும் எனக் கூறப்படுகிறது. டெக்டோனிக் தகடுகள் மற்றும் கோர்-மேன்டில் காரணமாகவும் இது ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏன் முக்கியம்: அதாவது இந்த மர்ம மலைகள் பண்டைய கடல் க்ரஸ்ட்டால் ஆனவை என்று அர்த்தம்.. இது பாசால்ட் பாறை மற்றும் கடல் வண்டல்களின் கலவையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் மையப்பகுதியிலிருந்து வெப்பம் எப்படி வெளியேறுகிறது என்பதில் இந்த நிலத்தடி மலைகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நிலத்திற்கு அடியில் காணப்படும் இந்த மலைத்தொடர்கள் நாம் முன்பு எதிர்பார்த்த காட்டிலும் சிக்கலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மலைத்தொடர்களுக்கும் நமது பூமியை இயக்கும் ஒட்டுமொத்த செயல்முறைகளுக்கு இடையே முக்கியமான தொடர்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications