செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.. பெரும் இழப்பு.. சுஷ்மா மரணத்தால் கலங்கும் வெங்கையா நாயுடு!
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா மரணம் இந்தியாவிற்கு பெரிய இழப்பு என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் சுஷ்மாவின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அரசியலில் மிக முக்கியமான தலைவரை இழந்துவிட்டேன். இந்திய அரசியலின் மாபெரும் அத்தியாயம் முடிந்து போனது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய செயல் தலைவர் ஜெபி நட்டா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மா சுவராஜின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!
அதில், சுஷ்மாவின் இறப்பு செய்தி கேட்டு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மரணம் இந்தியாவிற்கு பெரிய இழப்பு, எனக்கும் தனிப்பட்ட முறையில் இது பெரிய இழப்பு.
அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, மிக சிறந்த நாடாளுமன்ற எம்பி, நல்ல பேச்சாளர், நிர்வாக திறன் கொண்ட சிறந்த அமைச்சர். அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications