என்சிஇஆர்டி 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து ஜனநாயகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் நீக்கம்
டெல்லி: பத்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் இருந்து சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து ஜனநாயகத்தின் முழு சாப்டரும் அறிவியலில் தனிம வரிசை அட்டவணை உள்ளிட்ட சில முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது.
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. மத்தியக் கல்வி வாரியங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது. மாநிலக் கல்வி வாரியங்கள் அந்த மாநிலங்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளன.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வழங்கும் புத்தகங்களை சிபிஎஸ்இ பின்பற்றுகிறது. எஸ்சிஇஆர்டி மாநிலப் பாடத் திட்டத்தையும் பின்பற்றுகின்றன. அவ்வப்போது இவை பாடத்திட்டங்களை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி அறிவித்து இருந்தது.
மேலும் இது நடப்பு கல்வி ஆண்டான 2023- 24-லேயே அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் இருந்து சில பாடங்கள் நீக்கப்படுவதாக் என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது. அதாவது, தனிம வரிசை அட்டவணை (periodic table) உள்ளிட்ட பாடங்கள் அறிவியல் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அதுமட்டும் இன்றி சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் எரிசக்திக்கான ஆதாரம் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து ஜனநாயகத்தின் முழு சாப்டரும் நீக்கப்பட்டுள்ளது. பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய சாப்டர்கள் நீக்கப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக சீர்திருத்த நடவடிக்கையாக என்.சி.இ.ஆர்.டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து பரிணாம கோட்பாடு என்ற பகுதி நீக்கப்பட்டு இருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
பாடத்திட்டத்தில் இருந்து சில முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டது குறித்து என்.சி.இ.ஆர்.டி கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு மாணவர்களின் சுமையை சற்று குறைக்க வேண்டியது அவசியம் ஆகியுள்ளது. மிகவும் கடினமான பாடப்பகுதி, திரும்ப திரும்ப வரும் பாடங்கள், தற்போதைய பொருளடக்கத்திற்கு தேவையற்றதாக உள்ள பகுதி உள்ளிட்ட காரணங்களால் இந்த பாடங்கள் நீக்கப்பட்டு இருப்பதாக என்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.
எனினும், மாணவர்கள் இந்த பாடப்பிரிவுகளை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தாங்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுக்கு ஏற்றபடி படித்துக்கொள்ளலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அறிவியல் கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்படுவது பத்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆகும். அதன்பிறகு வேதியியல் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே தனிம வரிசை அட்டவணை உள்ளிட்ட பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications