27 ஆண்டு காத்திருப்பு.. 1998க்கு பின் மீண்டும் டெல்லி அரியணையில்! ஆம் ஆத்மியை அடிச்சு தூக்கிய பாஜக!
டெல்லி: இந்தியாவின் தலைநகரை ஆளப் போவது யார் என்று கேள்விக்கு விடை இன்று கிடைத்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. ஏற்கனவே அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிறைக்குச் சென்றார்.

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சராக அதிஷி இருந்தார். இம்மாதத்துடன் டெல்லி சட்டசபை பதவிக் காலம் நிறைவு பெறுகிறது.
பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவும், 8ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், அறிவிக்கப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலை பொருத்தவரை இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித் தனியாக தேர்தலை சந்தித்தன. மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி பிளவு பட்டிருக்கும் நிலையில் தலைநகரான டெல்லியிலும் இந்தியா கூட்டணி உடைபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலாக டெல்லியில் ஆட்சியைப் பிடித்த பாஜக சில நாட்களில் அதனை இழந்தது. தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வருகைக்குப் பிறகு டெல்லி ஆம் ஆத்மி வசமே இருக்கிறது. 2013ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரசின் அரசியல் எடுபடாத நிலையில் தற்போது ஆம் ஆத்மி பாஜக இடையே இருமுனை போட்டி தான் நிலவியது
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், ஆம் ஆத்மி கட்சி கடுமையான போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி களத்தில் இல்லை என்பது தான் நிலவரம்.
தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறி இருந்த நிலையில் அது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கிறது. மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலையில் பாஜக 45க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றுள்ளது. ஆம் ஆத்மி ஏறக்குறைய 22 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிப்பதால் தற்போது பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.
தலைநகர் டெல்லியில் 1952 ஆம் ஆண்டு முதல் சட்டசபை உருவானதிலிருந்து பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. 1956 முதல் 1993 வரை டெல்லி சட்டமன்றம் கலைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. முன்னதாக 1952ல் நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சவுத்ரி பிரம்ம பிரகாஷ் டெல்லியின் முதல் முதலமைச்சராக பதவி ஏற்றார். 1955 ஆம் ஆண்டில் அவர் ராஜினாமா செய்த நிலையில், 1956ஆம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
அதற்குப் பிறகு பல மாற்றங்களை டெல்லி சந்தித்து நிலையில் 1993ஆம் ஆண்டு 70 எம்எல்ஏக்கள் கொண்ட சட்ட சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது மதன்லால் குரானா முதல்வரானார். தொடர்ந்து அவர் ஹவாலா ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் ராஜினாமா செய்த அதற்குப் பிறகு சாகிப் சிங் வர்மா முதலமைச்சர் ஆனார். 1998ல் பாஜக சுஷ்மா சுவராஜை முதல்வர் ஆக்கியது.
ஆனால் அப்போது இருந்து காங்கிரஸின் சகாப்தம் தொடங்கியது. 1998 தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்று ஷீலா தீக்ஷித் முதல்வரானார். அப்போது தான் டெல்லியில் முகம் முற்றிலுமாக மாறியது தொடர்ந்து 2003, 2008 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் 2013 தேர்தலில் தான் கெஜ்ரிவாலின் வருகை இருந்தது.
அண்ணா ஹசாராவின் ஜன்லோக்பால் இயக்கத்தில் இருந்து வந்த ஆம் ஆத்மி 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக அதிகமாக 31 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க முடியவில்லை. இறுதியில் காங்கிரசின் ஆதரவோடு அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். ஆனால் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படாததால் 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.
அதற்கு பிறகு டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அப்போது பாஜக மூன்று தொகுதிகளில் மட்டுமே வென்ற நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. தொடர்ந்து அரவிந்த் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். 2020 சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்றது. பாஜக எட்டு இடங்களில் வென்றது. அப்போதும் காங்கிரஸ் பூஜ்ஜியம் தொகுதிகளை மட்டுமே வென்றது. இந்நிலையில் 2025ல் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!











Click it and Unblock the Notifications