59 இடங்களை அள்ளும்.. டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சிதான்.. பாஜகவிற்கு ஷாக் தந்த கருத்து கணிப்பு

டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியை தக்க வைக்கும் என்று ஐஏஎன்எஸ் - சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியை தக்க வைக்கும் என்று ஐஏஎன்எஸ் - சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

இந்த நிலையில், டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெறும்,. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று ஐஏஎன்எஸ் - சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் ஆம் ஆத்மி குறைந்த பட்சம் 59 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.

 பாஜக என்ன

பாஜக என்ன

அதேபோல் பாஜக கட்சி அங்கு 8 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் காங்கிரஸ் மூன்று இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. தொகுதி வாரியாக பிரித்து பார்த்தால் ஆம் ஆத்மி 64 இடங்களை கூட எளிதாக பெறும் என்று கூறுகிறார்கள்.

வாரியாக

வாரியாக

அங்கு பாஜக தொகுதி வாரியாக அதிகபட்சம் 3-13 இடங்களை மட்டும் வெல்லும். காங்கிரஸ் அதிகபட்சம் 0-3 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்று தொகுதி வாரியாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று என்ற பாஜக, காங்கிரஸ் கனவு கலையும் நிலையில் உள்ளது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி அங்கு எளிதாக தனிப்பெரும்பான்மை பெறும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சி டெல்லியில் நிறைய திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. வறுமையில் இருப்பவர்கள், பெண்களை மையப்படுத்தி நிறைய இலவச திட்டங்களை கொண்டு வந்து உள்ளது. இதனால் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை மீண்டும் பெறும் என்று கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+