உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? பாஜகவை அவர்களின் ஆயுதத்தை வைத்தே வீழ்த்திய ஆம் ஆத்மி.. எப்படி?
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவை அவர்களின் ஆயுதத்தை வைத்தே ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தி இருக்கிறது.
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவை அவர்களின் ஆயுதத்தை வைத்தே ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தி இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மலை போல நம்பிய ஒரு விஷயம் தற்போது பாஜகவிற்கே எதிராக திரும்பி உள்ளது.
டெல்லியில் இமாலய வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி கட்சி சென்று கொண்டு இருக்கிறது. பெரும்பாலும் இன்று மாலைக்குள் ஆம் ஆத்மி 60 இடங்களை வென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 54 இடங்களில் முன்னிலை, பாஜக 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக மீண்டும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க இருக்கிறார்.

பாஜக கட்சி
பாஜக கட்சி பல மாநில தேர்தலிலும் லோக்சபா தேர்தலிலும் வரிசையாக வெற்றி பெற்று வந்தது. ஆனால் டெல்லி தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை நோக்கி சென்றுள்ளது. மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் என்று பல முக்கியமான தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்தும் கூட பாஜக தோல்வியை தழுவி உள்ளது. பாஜகவின் இந்த தோல்விக்கு ஆம் ஆத்மி எடுத்த ஆயுதம் ஒன்றும் காரணம். பாஜக பல வருடங்களாக பயன்படுத்தி வந்த ஆயுதத்தை ஆம் ஆத்மி கையில் எடுத்து உள்ளது.

பல மாநிலம்
பாஜக பல மாநிலங்களில் வளர்ந்ததற்கு காரணம் அவர்களின் சோஷியல் மீடியா டீம்தான். தங்களுக்கு எதிராக இருக்கும் எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும் பாஜக சோஷியல் மீடியா டீம் மிக மோசமாக கலாய்த்து கிண்டல் செய்யும். பாஜக சோஷியல் மீடியா குழு கிண்டல் செய்யாத எதிர்க்கட்சி தலைவர்களே கிடையாது என்றுதான் கூற வேண்டும். தற்போது அதே அரசியலைத்தான் ஆம் ஆத்மி கையில் எடுத்து இருக்கிறது.

டெல்லி சட்டசபை
டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி புதிய சோஷியல் மீடியா குழுவை உருவாக்கியது. பல இளைஞர்களை கொண்டு புதிய அணியை அக்கட்சி களமிறங்கியது. இதனால் கை மேல் பலன் கிடைத்தது. அமித் ஷா மலை போல நம்பியது அக்கட்சியின் சோஷியல் மீடியா குழுதான். ஆனால் அவர்களையே ஆம் ஆத்மி கட்சியின் சோஷியல் மீடியா குழு பாஜகவின் சோஷியல் மீடியா குழுவை மிஞ்சி இருக்கிறது.
|
மற்ற கட்சி
மற்ற கட்சி தலைவர்களை தாக்குவது மட்டுமின்றி, மிகவும் சுவாரசியமாக ஆம் ஆத்மி கட்சி வித்தியாசமான டிவிட்களை செய்தது. பார்த்ததும் கவரும் வகையிலும், சிரிக்கும் வகையிலும் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்தது. உதாரணமாக உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்பது போல உங்க கட்சியில் முதல்வர் வேட்பாளர் இருக்கிறாரா என்று பாஜகவை காமெடியாக ஆம் ஆத்மி சீண்டியது பெரிய வைரலானது.
|
எப்படி பிரச்சாரம்
மனைவி: கண்டிப்பா என் கணவர் வேறு பொண்ணை பத்திதான் நினைச்சிட்டு இருப்பார்..
கணவர்: இந்த அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் எப்படி இத்தனை சீட் ஜெயிக்கிறார்?
இந்த பிரபல மீம் டெம்ப்லேட்டை ஆம் ஆத்மி கட்சி தங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தி உள்ளது. இதுவும் ஹிட் அடித்தது.
|
அட எப்படி
அட வாட்ஸ் ஆப் சாட்டில் கூட அரவிந்த் கெஜ்ரிவால் பற்றியும் அவரின் நல்ல ஆட்சி பற்றியும்தான் பேசிக்கொள்கிறார்களாம். அட ஏன் நெட்பிளிக்சை கூட ஆம் ஆத்மி கட்சி விட்டு வைக்கவில்லை. நெட்பிளிக்சை வைத்து ஆம் ஆத்மி செய்த பிரச்சார வீடியோ பெரிய வைரல் ஆனது. ஆம் ஆத்மி கட்சியின் இந்த ஸ்டைல் பிரச்சாரம் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
|
செம வரவேற்பு
ஆம் ஆத்மியின் இணைய குழு முழுக்க முழுக்க இப்படித்தான் பல நூறு டிவிட்களை செய்துள்ளது. பாஜக இதற்கு பதில் அளிக்க தெரியாமல் தினமும் திணறி வந்தது. பல நூறு மீம்களை இதற்காக ஆம் ஆத்மி கட்சி போட்டது. இதுதான் டெல்லியில் இளைஞர்களின் வாக்கை அப்படியே ஆம் ஆத்மி பக்கம் கொண்டு சென்றது. ஆம் ஆத்மி மிகவும் கவர்ச்சியாக செய்த விளம்பரம் குஜராத் மாடல் என்று ஒரு காலத்தில் பாஜக செய்ததுதான். தற்போது அதை வைத்தே பாஜகவை ஆம் ஆத்மி தோல்வி அடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications