அடுத்த இன்னிங்ஸிற்கு ரெடி.. கொண்டாட தொடங்கிய ஆம் ஆத்மி.. ஆனால் கெஜ்ரிவால் போட்ட கண்டிஷன்!
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ள நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் ஏற்கனவே வெற்றி கொண்டாட்டத்திற்கு தயார் ஆகி வருகிறது
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ள நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் ஏற்கனவே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவருவதால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லி முழுக்க பல இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 41 இடங்களில் முன்னிலை, பாஜக 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

இந்த நிலையில் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் ஏற்கனவே வெற்றி கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான் மாபெரும் வெற்றியை பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தது. டெல்லியில் ஆம் ஆத்மி குறைந்த பட்சம் சராசரியாக 54 -60இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இதனால் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எல்லோரும் இப்போதே வெற்றி கொண்டாடி வருகிறார்கள் . ஆம் ஆத்மி அலுவலகம் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
அங்கு இப்போதே தொண்டர்கள் சுவீட்களை வழங்க தொடங்கி உள்ளனர். அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மக்களுக்காக 5 ஆண்டுகாலம் பணி செய்திருக்கிறோம்; நாங்கள் வெற்றி பெறுவோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதே போல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தொண்டர்கள் அமைதியாக கொண்டாட வேண்டும்.
டெல்லி மாசுபாட்டை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். டெல்லியில் எங்கும் வெடி வெடிக்க கூடாது. அமைதியான முறையில் வெற்றியை கொண்டாட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications