எக்சிட் போல்களை வீழ்த்திய பாஜக.. தமிழிசை அக்கா பாணியில் சொல்வதானால்.. இது வெற்றிகரமான தோல்விதான்..!
எக்சிட் போல்களை வீழ்த்திவிட்டது பாஜக
Recommended Video
டெல்லி:டெல்லியில் ஆம் ஆத்மி வென்றிருக்கலாம்.. ஆனால் எக்சிட் போல்களை பாஜக வென்று விட்டது.. என்ன ஆச்சரியமா இருக்கா.. எக்சிட் போல்களில் பாஜகவுக்கு பெரிய அளவில் சீட் கிடைக்காது என்று கணிக்கப்பட்ட நிலையில் அதை தவிடு பொடியாக்கி 20க்கும் மேற்பட்ட இடங்களை வெல்கிறது பாஜக.
எப்பவுமே எக்சிட் போல்களை முழுமையாக நம்ப முடியாது. காரணம், அதில் வருவது பெரும்பாலும் சரியாக இருப்பதே இல்லை. ஏதாவது ஒன்று இரண்டு எக்சிட் போல்கள்தான் சரியாக இருக்கும். மற்றவை சரியாக இருப்பதில்லை.
இதனால்தான் அரசியல் தலைவர்கள் எக்சிட் போல் முடிவுகளை வைத்து எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. மக்களும் கூட ஆர்வமாக பார்ப்பார்களே ஒழிய முழுமையான ரிசல்ட்டைத்தான் அவர்களும் நம்புகிறார்கள். இப்படி நடக்கலாம் என்று ஒரு அடையாளமாக மட்டுமே எக்சிட் போல்களை எடுக்க முடிகிறது.

என்டிடிவி
இப்படித்தான் முன்பு தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக என்டிடிவி எக்சிட் போல் நடத்தி கணிப்பை வெளியிட்டது. ஆனால் தேர்தல் முடிவின்போது அப்படியே தலைகீழாக ரிசல்ட் வந்தது. அதாவது அவர்கள் யார் ஜெயிப்பார்கள் என்று கூறினார்களோ அவர்கள் படு தோல்வி அடைந்தனர். அப்போது என்டிடிவியை அனைவரும் நம்பினர். இந்த எக்சிட் போல் முடிவால் என்டிடிவிக்கு பெரும் அவமானமாக போய் விட்டது. அவர்கள் அத்தோடு எக்சிட் போல் எடுப்பதையே விட்டு விட்டனர்.

கணிப்புகள்
இப்போதும் கூட நம்ம டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி நடந்த எக்சிட் போல் கணிப்புகளில் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைக்கும் என்று அனைத்து எக்சிட் போல்களிலுமே கூறியிருந்தனர். அது சரியாக நடந்துள்ளது. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. அந்த வகையில் அனைத்து எக்சிட் போல்களுமே சரியாகவே கணித்துள்ளன என்று எடுத்துக் கொள்ளலாம்.

முன்னிலை
அதேபோல பாஜகவைப் பொறுத்தவரை இந்தியா டுடே 7 சீட் வாங்கும் என்று கூறியது. ஏபிபி நியூஸ் 14 சீட் கிடைக்கும் என்று சொன்னது. ரிபப்ளிக் டிவி 15 சீட் என்றது. நியூஸ் எக்ஸ் 17, டிவி 9 பரத்வர்ஷ் 15 என்று கணித்திருந்தது. இதில் டைம்ஸ் நவ் 23 இடங்கள் கிடைக்கும் என்று கூறியிருந்தது. தற்போது இதுதான் பலிக்கப் போகிறது. ஆம் சரியாக 23 சீட்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

வெற்றிகரமான தோல்வி
பெரும்பாலான எக்சிட் போல்களில் 20க்கும் குறைவான இடங்களே பாஜகவுக்குக் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் அதை தகர்த்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லப் போகிறது. இது பெரியசாதனைதான். போன 2015 தேர்தலின்போது பாஜகவுக்கு வெறும் 3 தொகுதிகளிலேயே வெற்றி கிடைத்தது என்பது நினைவிருக்கலாம். அந்த வகையில் பாஜக பெருமையாகவே இந்த தோல்வியை எடுத்துக் கொள்ளலாம்.. நம்ம தமிழிசை அக்கா பாணியில் சொல்வதானால் இது வெற்றிகரமான தோல்விதான்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications