தவிடுபொடியான ஆம் ஆத்மி கனவு.. டெல்லியில் மலரும் தாமரை.. பாஜக வெற்றிக்கு என்ன காரணம்? பின்னணி தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 10 வருடங்களுக்கும் மேலாக டெல்லியில் கோலோச்சிய ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தலில் தோல்வி கிடைக்க காரணம் என்ன? பாஜக சாதித்தது எப்படி? என்பது பற்றிய பின்னணி தகவலை இங்கே பார்க்கலாம்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தலைநகர் டெல்லியில் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை பாஜக ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2013 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மியே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் டெல்லியில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற பாஜகவின் கனவு நிறைவேறவில்லை. ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவே எதிபார்க்காத வெற்றி தலைநகரில் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு காரணம் என்ன? ஆம் ஆத்மி எங்கே கோட்டை விட்டது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலை

* ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கிறது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருப்பதால் ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலை ஒரு காரணம் ஆகும். இந்த அதிருப்தி ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டு

* ஆம் ஆத்மியின் இந்த பின்னடைவுக்கு மற்றொரு முக்கிய காரணமாக மதுபான ஊழல் முறைகேடு சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சி காமன்வெல்த் ஊழல், 2 ஜி முறைகேடு, நிலக்கரி சுரங்க முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அந்த கட்சியின் இமேஜ் கடுமையாக அடி வாங்கியது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தில் அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்து மிஸ்டர் கிளீன் என்ற பிம்பத்துடன் டெல்லியில் ஆட்சியை பிடித்த கெஜ்ரிவால் மீதே எழுந்த முறைகேடு புகார் ஆம் ஆத்மி விழுந்த அடிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் முகம்

* பாஜகவின் இந்த வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது பிரதமர் மோடியின் பிம்பமாகும். மத்தியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்து இருக்கும் பிரதமர் மோடி மீதான செல்வாக்கு பல்வேறு மாநிலங்களிலும் கொஞ்சமும் குறையாமல் உள்ளது. டெல்லியிலும் இந்த இமேஜ் அதிகரித்துள்ளது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாஜக முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டாலும் கூட பிரதமர் மோடியின் வெகுஜன ஈர்ப்பு அக்கட்சியின் சக்சஸிற்கு முக்கியமாக அமைந்துள்ளது.

இந்த முறையும் காங்கிரஸ் ஜீரோ?

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 11.30 மணி நிலவரப்படி பாஜக 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

ஏற்கனவே கடந்த 2 சட்டசபை தேர்தல்களில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாத காங்கிரஸ் இந்த முறையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றே தெரிகிறது. இதனால் கடந்த 3 சட்டசபை தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் ஜீரோவிலேயே காங்கிரஸ் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+