டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி தேர்தல் முடிவுகள் LIVE: ஆம் ஆத்மி 62.. பாஜக பெரும் சரிவு.. 8 இடங்களில் மட்டும் வெற்றி

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடக்க உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வென்றுள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டும் வென்றுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. கடந்த பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . 70

தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.டெல்லி சட்டசபை

தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. அங்கு வாக்குகள் 22 வாக்கு எண்ணும் மையங்களில் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி உள்ள மாலை 6 மணி அளவில் முழு விவரம் வெளியாகி உள்ளது.

இதன்படி ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வென்றுள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

Newest First Oldest First
4:52 PM, 11 Feb

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். டெல்லியில் நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம். மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து முன்னேறுவோம் - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா
4:50 PM, 11 Feb

டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் தொலைபேசியில் வாழ்த்து
4:50 PM, 11 Feb

டெல்லி: இது என் மிக சிறந்த பிறந்த நாள் பரிசு. இது உண்மைக்கான வெற்றி. ஆம் ஆத்மி கட்சி செய்த கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால்
3:54 PM, 11 Feb

டெல்லி: டெல்லி மக்கள் சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளனர். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று உள்ளோம். ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால்
3:39 PM, 11 Feb

டெல்லி

டெல்லி
டெல்லியின் வெற்றி இது- அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி உரை
3:19 PM, 11 Feb

பாஜக முன்னிலை மளமள சரிவு

டெல்லி: 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை, 7 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை, தொடர்ந்து மளமளவென பாஜக முன்னிலை நிலவரம் குறைகிறது
3:15 PM, 11 Feb

சிங்கிள் டிஜிட்டில் பாஜக முன்னிலை

டெல்லி: 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை, 8 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை
3:07 PM, 11 Feb

மனிஷ் சிசோடியா வெற்றி

பட்பர்கஞ்ச் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளரும், துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா வெற்றி, கடைசிவரை போராடி பாஜகவை வீழ்த்தினார்
2:50 PM, 11 Feb

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களில் முன்னிலை. பாஜக பெரும் சரிவு. பாஜக 7 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது
2:47 PM, 11 Feb

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை. பாஜக பெரும் சரிவு. பாஜக 8 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது
2:42 PM, 11 Feb

டெல்லி: டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் பாஜகவின் ரவீந்திர சிங் நேகியை விட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 656 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
2:41 PM, 11 Feb

டெல்லி: சீலாம்பூர், தியொலி, முஸ்தபாபாத் மற்றும் ராஜேந்திர நகர் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி
2:41 PM, 11 Feb

டெல்லி: தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ளது. பாஜகவின் பொய் தோல்வி அடைந்துள்ளது. டெல்லி மக்களை இதற்காக நான் வணங்குகிறேன் - ப.சிதம்பரம்
2:40 PM, 11 Feb

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தற்போதைய டெல்லி சட்டப்பேரவையை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கலைத்து உத்தரவிட்டுள்ளார்
2:40 PM, 11 Feb

டெல்லி: ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் ஓஹ்லா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அதிரடி வெற்றி
2:37 PM, 11 Feb

தேர்தல் வெற்றி காரணமாக டெல்லி முழுக்க ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டம்
2:37 PM, 11 Feb

டெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவை ஏற்று வெடி வெடிக்காமல் ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்
1:33 PM, 11 Feb

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மேலும் இரு தொகுதிகளில் வெற்றி
1:33 PM, 11 Feb

டெல்லி தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 50.74%, பாஜக 42.07% வாக்குகளை பெற்றுள்ளன
1:32 PM, 11 Feb

ஆம் ஆத்மி தேர்தல் வெற்றிக்கு மு.க ஸ்டாலின், மமதா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்து
1:32 PM, 11 Feb

வளர்ச்சித் திட்டங்கள் வகுப்புவாத அரசியலை முறியடிக்கிறது என்பது தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபணமாகிறது- ஸ்டாலின்
1:31 PM, 11 Feb

தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து நன்றி தெரிவித்தார்
1:31 PM, 11 Feb

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். நாங்கள் முடிந்த அளவிற்கு பிரச்சாரம் செய்தோம் - கவுதம் கம்பீர்
1:30 PM, 11 Feb

டெல்லியில் துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்திருக்கிறார்கள் - நடிகர் பிரகாஷ்ராஜ்
1:27 PM, 11 Feb

வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பெரும் 'நோ' சொல்லி இருக்கிறார்கள் - திமுக எம்பி கனிமொழி
1:27 PM, 11 Feb

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 56 இடங்களில் முன்னிலை. பாஜக மொத்தம் 14 இடங்களில் முன்னிலை
1:24 PM, 11 Feb

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பட்பர் கஞ்ச் தொகுதியில் 556 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவு
12:53 PM, 11 Feb

கெஜ்ரிவாலுக்கு மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
12:37 PM, 11 Feb

ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல், டெல்லி மக்கள் விளக்குமாறை வைத்துள்ளனர் - தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
12:36 PM, 11 Feb

டெல்லி: தலைநகரில் காங்கிரஸ் தோற்கும் என்பது தெரிந்ததே. ஆனால் பாஜகதான் பெரிதாக பேசிவிட்டு, மோசமாக தோல்வி அடைந்துள்ளது - ம.பி முதல்வர் கமல்நாத்
READ MORE

Delhi Assembly Election Result Live Updates:  Who will get the thrown in the capital?
English summary
Delhi Assembly Election: 62.59% vote turned out says election commission after 24 hours delay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X