என் டிவிட்டை சேவ் செய்து கொள்ளுங்கள்.. பாஜகதான் ஜெயிக்கும்.. சவால் விடும் எம்பி மனோஜ்.. எப்படி?
Recommended Video
டெல்லி: டெல்லியில் பாஜக 48 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும். கருத்து கணிப்புகளை பொய்யாக்கி பாஜக கண்டிப்பாக தேர்தலில் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடக்க உள்ளது. வாக்கு எண்ணுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது. அங்கு பெரும்பான்மை பெற மொத்தம் 36 இடங்களில் வெல்ல வேண்டும்.

யார்?
இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான் மாபெரும் வெற்றியை பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தது. பெரும்பாலும் டெல்லியில் நாடானது சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியை தக்க வைக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் ஒரே மாதிரியாக தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் ஆம் ஆத்மி குறைந்த பட்சம் சராசரியாக 54 -60இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.

என்ன இடங்கள்
அதேபோல் பாஜக கட்சி அங்கு 10-14 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் காங்கிரஸ் 2 இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது, என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எல்லோரும் இப்போதே வெற்றி கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். டெல்லி தேர்தல் பாஜக vs ஆம் ஆத்மிக்கு இடையிலான கடுமையான போட்டியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளும் கடுமையாக மோதிக்கொண்டது.

பாஜக
இந்த நிலையில் டெல்லி தேர்தல் குறித்து டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் , டெல்லியில் பாஜக 48 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும். கருத்து கணிப்புகளை பொய்யாக்கி பாஜக கண்டிப்பாக தேர்தலில் வெற்றிபெறும். என்னுடைய டிவிட்டை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பின் வந்து தோல்விக்கு பொய்யான காரணம் செல்ல வேண்டாம், வாக்கு பதிவு எந்திரம் மீது பழி போட வேண்டாம் என்று சவால் விட்டு இருக்கிறார்.

சவால் வெல்லுமா
அவரின் இந்த சவால் டெல்லி தேர்தலில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தோல்வி அடையும் என்று ஆம் ஆத்மி நினைத்த நிலையில், மனோஜ் திவாரி இப்படி டிவிட் செய்துள்ளார். இன்று மாலை டெல்லி பாஜக எம்பிக்கள் 7 பேரும் அவசர கூட்டம் நடத்த இருக்கிறார்கள். பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய தலைவர் ஜே பி நட்டாவுடன் இன்று மாலை இவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications