டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்குதாம் ஆம் ஆத்மி! Weepreside வெளியிட்ட எக்ஸிட் போல் ரிசல்ட்!
டெல்லி: பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள், டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணித்துள்ள நிலையில் WeePreside நடத்திய எக்ஸிட் போல் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நாடும், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பெரிதும் எதிர்பார்த்து வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புளில், ரிசல்ட் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் சறுக்கலாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி தேர்தல்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 70 இடங்களுக்கு 699 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
எக்ஸிட் போல் முடிவுகள்
பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. ஆனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என Weepreside எக்ஸிட் போல் கணிப்பை வெளியிட்டுள்ளது.
மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 - 52 இடங்களில் வெல்லக்கூடும் என்றும், பாஜக 18 - 23 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சி 0 - 1 இடத்தில் வெல்லும் என்றும் Weepreside எக்ஸிட் போல் ரிசல்ட் தெரிவிக்கிறது.

தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்படி வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி 49.2%, பாஜக 42.8%, காங்கிரஸ் கட்சி 5.1% பெற்றுள்ளதாக Weepreside தெரிவித்துள்ளது.
டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தமாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த ரிசல்ட்டை வெளியிட்டுள்ளதாக Weepreside தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications