ஆண்களே இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க.. அதிர வைத்த "ஆண்ட்டி"யின் பேச்சு!
Recommended Video
டெல்லி: குட்டை ஆடை அணிந்திருக்கும் பெண்களை நிர்வாணமாக்கி அவர்களை பலாத்காரம் செய்யுங்கள் என நடுத்தர வயது பெண் ஒருவர் அங்கிருந்த ஆண்களிடம் அறிவுறுத்திய வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாலியல் பலாத்காரம் என்பது பல்கி பெருகிவிட்டது. இதை தடுக்க பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால்
இளம் பெண்களை பெண் ஒருவரே பலாத்காரம் செய்யுங்கள் என்று கூறும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
ஒரு உணவகத்துக்கு அரை குறை ஆடைகளுடன் சில பெண்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், அங்கிருந்த ஆண்களை அழைத்து இதுபோல் குட்டை ஆடை அணிந்து வரும் பெண்கள் நீங்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அதுபோல் அணிந்துள்ளனர்.

இளம்பெண்கள்
எனவே அவர்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்ய தகுதியானவர்கள் என அந்த பெண் கூறியதை கேட்டு குட்டை ஆடை அணிந்து வந்த இளம் பெண்கள் ஷாக்காகிவிடுகின்றனர். இவ்வாறு கூறிவிட்டு அந்த பெண் அங்கிருந்த ஷாப்பிங் சென்டருக்கு செல்கிறார். அவர் பின்னாலேயே வீடியோ கேமராவை ஆன் செய்து விட்டு அந்த இளம் பெண்களும் செல்கின்றனர்.

காதில்
அப்போது இளம்பெண்களை பலாத்காரம் செய்யுமாறு கூறியதற்கு மன்னிப்பு கேளுங்கள் என்கின்றனர். ஆனால் அந்த பெண்ணோ இவர்கள் கூறுவதை எதையும் காதில் போட்டு கொள்ளாமல் அங்கும் இங்கும் சுற்றி வருகிறார்.

மன்னிப்பு
அந்த பெண் எங்கு சென்றாலும் பின்னாலேயே சென்ற அந்த பெண்களால் எரிச்சல் அடைந்த அந்த பெண் அந்த கடையில் உள்ள ஊழியர்களை அழைத்து போலீஸை அழைக்குமாறு கூறுகிறார். பின்னர் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா. எத்தனை தைரியம் உங்களுக்கு என கடிந்து கொள்கிறார்.

மன்னிப்பு
அப்போது அங்கு வந்த இன்னொரு பெண்ணிடம் இந்த இளம் பெண்கள் நடந்ததை கூற அவரும் அந்த பெண்ணை கடிந்து கொள்கிறார். "உங்களுக்கு எத்தனை அறுவறுக்கத்தக்க மனப்பான்மை. பெண்கள் அவர்கள் விருப்பப்படி ஆடை அணிவது அவர்களது உரிமை. எனவே அந்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்கிறார்.
அதிர்ச்சி
அதையும் அந்த பெண் காதில் போட்டு கொள்ளவில்லை. மாறாக அந்த பெண்கள் எடுக்கும் வீடியோவில் வந்து என்னுடைய வார்த்தையை இந்தியா முழுவதும் உள்ள ஆண்கள் கேளுங்கள். இது போல் குட்டை ஆடை அணியும் பெண்களை பலாத்காரம் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications