140 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம்!
டெல்லி: போபாலிலிருந்து டெல்லி நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், அதன் இடது என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இந்த விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர். விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டது மொத்த பயணிகளிடையே அதிரச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் விமானி சாமர்த்தியமாக விமானத்தை ஜெய்ப்பூரில் பாதுகாப்பாக தரையிறக்கியிருக்கிறார்.

போபால் ராஜா போஜ் விமான நிலையத்திலிருந்து AI 1886 விமானம் புறப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் 140 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது, விமானத்தின் இடது என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர். என்ஜின் கோளாறை அடுத்து விமானத்தின் பைலட் உடனடியாக ஜெய்ப்பூர் வான்வழி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிற்க அனுமதி கோரினார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி விமானம் ஜெய்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள், ஊழியர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.


Click it and Unblock the Notifications
