டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்.. நடுவானில் திடீரென தீ விபத்து! பதறிய பயணிகள்
டெல்லி: பாட்னாவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமான போக்குவரத்துத் துறை இருந்து வருகிறது.
கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், எரிபொருள் விலையும் ஏர்லைன் நிறுவனங்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் லாபத்தில் இயங்குவதே ஏர்லைன் நிறுவனங்களுக்குச் சவாலாக உள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானம்
இப்படிப்பட்ட சூழலில் விமான நிறுவனங்கள் குறித்து வரும் சிறு புகாரும் கூட ஏர்லைன் நிறுவனங்களுக்குக் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நடந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் பாட்னாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுள்ளது.

தீ விபத்து
SG723 என்ற இந்த விமானம் 185 பயணிகளுடன் பாட்னாவில் இருந்து கிளம்பி உள்ளது. இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து விமானம் உடனடியாக பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
அதேநேரம் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து விரிவான தொழில்நுட்ப விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் தீ விபத்திற்கான காரணமாக தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பயணிகள் அனைவரும் தற்காலிகமாகத் தங்க ஏற்பாடுகள் விமான நிலையத்திலேயே செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள்
விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், டெல்லி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் பாட்னா விமான நிலையத்திற்குத் திரும்பியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான என்ஜினில் தீப்பற்றியதை அப்பகுதியில் வசிக்கும் மக்களே முதலில் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
அதன் பின்னர் பைலட்டிற்கு தீ பற்றியது குறித்துத் தெரிவிக்கப்பட்டு, விமானம் உடனடியாக பாட்னா ஏர்போர்ட்டிற்கு திரும்பியதாக பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) சந்திரசேகர் சிங் தெரிவித்தார். மேலும், 185 பயணிகளும் பத்திரமாக உள்ளதாகவும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணத்தை பொறியியல் குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications