என்னை விட்டுடுங்க.. உயிருக்கு போராடிய நிலையில் கெஞ்சிய இளைஞர்.. டெல்லி கலவரம்.. திடுக் புகைப்படம்!
டெல்லியில் நடக்கும் கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
டெல்லி: டெல்லியில் நடக்கும் கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் சில புகைப்படங்கள் மனதை உருக்கும் வகையில் உள்ளது.
Recommended Video
டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. நேற்று மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று முதல் நடந்து வருகிறது. இந்த பெரும் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர்.

என்ன போராட்டம்
இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள்தான் அதிக குறி வைத்து தாக்கப்பட்டார்கள். முக்கியமாக இஸ்லாமியர்களின் கடைகள் அதிகம் குறி வைத்து கொளுத்தப்பட்டது. இஸ்லாமிய பெயர்கள் கொண்ட கடைகள் எல்லாம் கொளுத்தப்பட்டது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த கலவரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
|
நேற்று இஸ்லாமியர்கள்
அதேபோல் நேற்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் சிறிய மசூதி ஒன்றும் பஜன்பூரா பகுதியில் கொளுத்தப்பட்டது. . அந்த மசூதி மீது கலவரம் செய்யும் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிகிறார். இந்த நொடி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் முழுக்க வைரலாகி உள்ளது. ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS - Danish Siddiqui.) எடுத்த புகைப்படங்கள் ஆகும் இது.
|
யார் எடுத்த புகைப்படம்
இவர் எடுத்த புகைப்படங்கள் டெல்லி கலவரத்திற்கு பெரிய ஆதாரமாக மாறியுள்ளது. முக்கியமாக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுற்றி நின்று கலவரக்காரர்கள் தாக்கும் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது. அந்த இளைஞர் தன்னை விட்டு விடுங்கள் என்று உயிருக்கு கெஞ்சிய நேரத்திலும் கூட அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி இருக்கிறார்கள். அவர் ரத்தம் வடிய தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரை சுற்றி ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கையில் குச்சியுடன் பலர் தாக்க தயாராக இருக்கிறார்கள்.

கலவரம் எப்படி
இந்த புகைப்படம்தான் டெல்லி கலவரத்தை அப்படியே எடுத்துக்காட்டி இருக்கிறது. உலகம் முழுக்க பலர் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள். இதுவும் டேனிஷ் எடுத்த புகைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. .நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 பேர் இஸ்லாமியர்கள். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டார். போலீஸ் துணை கமிஷ்னர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications