டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊருக்கு ஒரு காலு.. ஏரியாவுக்கு ஒரு கட்சி.. டெல்லியில் ஆம் ஆத்மிக்காக களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆம் ஆத்மிக்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்று தற்போது முதல்வராக இருக்கிறார்.

ஜெயலலிதா மீது பாசம் காட்டிய ஜீவஜோதி.. தன் பக்கம் இழுக்க தவறி விட்டதா அதிமுகஜெயலலிதா மீது பாசம் காட்டிய ஜீவஜோதி.. தன் பக்கம் இழுக்க தவறி விட்டதா அதிமுக

பாஜக வெற்றி

பாஜக வெற்றி

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரவிந்த் கேஜரிவால் விரும்புகிறார். ஏற்கெனவே டெல்லியில் லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே வென்றுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிச்சயம் போட்டியிடும். எனவே கடும் போட்டியை சமாளித்து தற்போதைய ஆட்சியை அடுத்த தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ள அரசியல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளார். இதற்காக அவர்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

எல்லா கட்சிகளும்

இதை அரவிந்த் கேஜரிவாலே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஐபேக் நிறுவனம் எங்களுடன் பணியாற்றவுள்ளதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரை தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கட்சிகளும் அணுகியுள்ளன.

பீகார் முதல்வர்

பீகார் முதல்வர்

இவர் வகுத்து கொடுத்த வியூகத்தால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-இல் பிரதமராக வெற்றி பெற்றார். அது போல் ஆந்திரத்தில் பாரம்பரிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கினார். மேலும் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக வெற்றி பெறுவதற்கும் இவர்தான் வியூகம் வகுத்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பீகாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய துணை தலைவரும் ஐபேக் நிறுவனத்தின் உரிமையாளருமான பிரசாந்த் கிஷோர் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
IPAC's Prashant Kishore will now help Delhi's Aam Aadmi Party to retain its power in the next assembly elections which will be held in 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X