உண்மையில் பொருத்தமான வெற்றி.. 5 ஆண்டுகளும் சாதனையாக அமைய வாழ்த்து..ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துகள்
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்றும் தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் வாழ்த்துவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகியவற்றின் 5 முனை போட்டியாக இருந்தன.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்றைய தினம் நடைபெற்று கொண்டிருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 140 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் ஸ்டாலினுக்கு ஒவ்வொரு தலைவராக வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் கூறுகையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அவர் ஆட்சியின் 5 ஆண்டுகளும் சாதனைகளாக அமைய வாழ்த்துகிறேன். தமிழக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் சிறந்த அரசாக வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

அது போல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத்பவாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் தமிழக சட்டசபை தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். உண்மையில் உங்களுக்கு பொருத்தமான வெற்றி. உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications