மோடியின் தேசியவாதம் பொய்.. மோசடியானது.. கற்பனையானது: அரவிந்த் கேஜ்ரிவால் ஒரே போடு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பேசும் தேசியவாதம் என்பது பொய்.. மோசடியானது... கற்பனையானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் வரி பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டதால் தொழில்துறை நாசமாகிப் போனது. நாடு முழுவதும் தொழில் துறையினரை அச்சுறுத்தும் வகையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நோட்டீஸ்களை அனுப்பி வருகிறது.

இது போல லட்சக்கணக்கான நோட்டீஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை அத்தனையும் பணம் பறிக்கத்தான். ஆகையால்தான் இதனை வரி பயங்கரவாதம் என விமர்சிக்கிறோம்.
பிரதமர் மோடி தேசியவாதம் பற்றி பேசுகிறார். தம்மை தேசியவாத பிரதமர் என பெருமை கொள்கிறார். மோடி முன் வைக்கும் தேசியவாதம் என்பது பொய்யானது. மோடியின் தேசியவாதம் மோசடியானது.
பிரதமர் மோடி ஒரு கற்பனையான தேசியவாதத்தை முன்வைக்கிறார். மோடியின் தேசியவாத அரசில்தான் நாட்டின் தலைநகரின் முதல்வரான நானே தாக்கப்படுகிற அபாயகரமான நிலைமை உருவாகி உள்ளது.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
டெல்லியில் மே 12-ல் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 23-ல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications
