ராகுல் காந்திக்கு சாதாரண பாஸ்போர்ட்.. தடையில்லா சான்றிதழ் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல் காந்திக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்படுவதற்காக தடையில்லா சான்றிதழை டெல்லி நீதிமன்றம் வழங்கியது. எம்.பி பதவி பறிக்கப்பட்டதால் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த நாடாளுமன்ற அந்தஸ்திலான பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 28 ஆம் தேதி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபனம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அது தொடர்பான மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற அந்தஸ்திலான பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இதற்கிடையே வெளிநாடு செல்ல இருப்பதால் தனக்கு சாதாரண பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Delhi court granted Congress leader Rahul Gandhi NOC for issuance of an ordinary passport

எனினும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகுதான் பாஸ்போர்ட் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால், நீதிமன்றத்தில் தடையில்லா சான்று கோரி ராகுல் காந்தி டெல்லி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் காந்தி மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே அவருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த மனுவிற்கு பதிலளிக்க சுப்பிரமணிய சுவாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதன்படி, சுப்பிரமணியன் சுவாமி இன்று பதில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லா சான்றிதழ் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு இல்லாமல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதன் மூலம் ராகுல் காந்திக்கு பாஸ்போர்ட் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. இதனால், ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+