பிரதமர் மோடி ஆவணப்படம்.. பிபிசி உள்பட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்.. டெல்லி கோர்ட் அதிரடி.. ஏன்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்த 2 பகுதிகளாக பிபிசி ஆவணப்படத்தை உருவாக்கி வெளியிட்டது. இந்த படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் கூட பல இடங்களில் திரையிடப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிபிசி உள்பட 3 நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்க கோரி டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரிய அளவில் கலவரம் உருவானது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பபட்டனர். இந்நிலையில் தான் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் 2 பகுதிகளாக பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை உருவாக்கியது.

‛மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில் வெளியான இந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் பிரதமர் மோடியை, குஜராத் கலவரத்துடன் தொடர்புப்படுத்தி இருந்தது. 2ம் பகுதி என்பது டெல்லி வன்மறை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவை பற்றி கேள்வி எழுப்பும் வகையில் இருந்தது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டும் வகையில் உள்நோக்கத்துடன் இந்த ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் தடையை மீறி பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இதற்கிடையே தான் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் இந்திய அரசை விமர்சித்தன.மேலும் இணையத்தில் ஆவணப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிபிசி நிறுவனத்துக்கு எதிராக டெல்லி ரோகினி நீதிமன்றம் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பாஜகவின் பினய் குமார் சிங் தாக்கல் செய்தார். இவர் ஜார்கண்ட் மாநில பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி ஆவணப்படம் மூலம் பிபிசி நிறுவனம், பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளை அவதூறு பரப்புகிறது. இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விக்கிமீடியாவில் ஆவணப்படத்துக்கான லிங்க் உள்ளது. மேலும் இண்டர்நெட் ஆர்ச்சிவிலும் இது உள்ளது. இதுதொடர்பாக பிபிசி, விக்கிமீடியா (விக்கிப்பீடியாவின் துணை நிறுவனம்), இண்டர்நெட் ஆர்ச்சிவ் ஆகிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
மேலும் இந்த நிறுவனங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இன்று அதிரடியாக உத்தரவிட்டது. கூடுதல் மாவட்ட நீதிபதி ருசிகா சிங்லா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதாவது பிபிசி ஆவணப்படம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, அதுதொடர்பாக பிபிசி, விக்கிமீடியா, இண்டர்நெட் ஆர்ச்சிவ் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப ஆர்டர் பிறப்பித்தார். அதோடு எழுத்துப்பூர்வமாக 30 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications