"இடைக்கால ஜாமீன் இல்லை.." நாளை திகார் சிறை செல்கிறார் கெஜ்ரிவால்.. டெல்லி நீதிமன்றம் சொல்வது என்ன?
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜூன் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அவர் நாளை திகார் சிறையில் சரணடைய உள்ளார்.
கடந்த 2022 இறுதியில் டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கை அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கு அடுத்தடுத்து சிக்கலைக் கொடுத்து வருகிறது. அந்த மதுபான கொள்கை அப்போதே வாபஸ் பெறப்பட்டுவிட்ட போதிலும் பல ஆம் ஆத்மி தலைவர்கள் இதில் சிக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஓராண்டிற்கு மேலாக இந்த வழக்கில் சிறையில் இருக்கிறார். இதற்கிடையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால்: இந்தச் சூழலில் தான் அவருக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்த இடைக்கால ஜாமீன் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அவர் நாளை சரணடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு கோரிக்கை விடுத்த போதிலும் அதை அவசரவழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக அவர் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கடும் எதிர்ப்பு: இது தொடர்பான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. உடல்நிலை சரியில்லை என்று கெஜ்ரிவால் கூறும் போதிலும் பிரச்சாரம் செய்வதை அவரது உடல்நிலை தடுக்கவில்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விகாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications