விசாரணைக்கு வரமுடியாது.. இன்று ஆஜராகாத சவ்ரவ் தாஸ் – அசுதோஷ் ரங்கா! டெல்லி போலீஸ் அடுத்த பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தி கைதான வழக்கில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு நேற்று இரவு தான் ஜாமீன் கிடைத்தது. இதனால் அவர்கள் நிம்மதியடைந்த நிலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இருவருக்கும் இன்று மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படிசம்மன் வழங்கினர். ஆனால் அவர்கள் 2 பேரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அடுத்த நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகின்றனர்.

delhi-crime-branch-police-issues-summons-for-saurav-das-and-ashutosh-ranka-for-delhi-protest

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். கடந்த 10ம் தேதி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகு அவர்கள் 12ம் தேதி விடுவிக்கப்பட்டனர். பிறகு மீண்டும் 13ம் தேதி சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 14ம் தேதி முதல் நேற்று வரை இருவரும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று இரவில் இருவருக்கும் டெல்லி சிறப்பு எக்ஸிக்கியூட்டிவ் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கினார். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கான இடமாக இல்லை. இதனால் அங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்பது உள்பட சில நிபந்தனைகளும் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஹேப்பியாகினர்.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் இன்று காலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இருவருக்கும் சம்மன் வழங்கி உள்ளனர். கடந்த 13ம் தேதி தடையை மீறி போராட்டம் நடத்தியது தொடர்பாக பார்லிமென்ட் ஸ்ட்ரீட் மற்றும் கன்னாட் பிளேஸ் போலீசார் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

இந்த 2 வழக்குகளும் டெல்லி போலீசாரிடம் இருந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடிவெடுத்துள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பினர்.

அந்த சம்மனில் இன்று மதியம் 12 மணிக்கு டெல்லி ராஜூரி கார்டனில் உள்ள டெல்லி குற்றப்பிரிவு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் தான் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று உடனடியாக விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டு இருப்பது இருவருக்கும் சிக்கலை ஏற்படுத்தியது.

இதனால் அவர்கள் 2 பேரும் இன்று விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேற்று இரவு தான் ஜாமீனில் வெளியே வந்ததாகவும், இதனால் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி போலீசார் அவர்கள் 2 பேரிடமும் இன்னொரு நாள் விசாரணை நடத்தும் வகையில் சம்மன் வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த வழக்கில் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மட்டுமின்றி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அஜிங்கியா ஷிண்டேவிற்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அஜிங்கியா ஷிண்டே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொறுப்பாளராக உள்ளார்.

கடந்த 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட வந்த அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் வைத்தே போலீசார் கைது செய்தபோது போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் அஜிங்கியா ஷிண்டே ஆவார். இதனால் அவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+