டெல்லி மருத்துவர் தற்கொலை.. "சாவுக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏதான் காரணம்".. தற்கொலை கடிதம் சிக்கியது!
டெல்லி: தன்னை மிரட்டி பணம் பறித்ததாக ஆம்ஆத்மி எம்எல்ஏ மீது குற்றம்சாட்டிய டெல்லி மருத்துவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நேபி சாராய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (52). இவருக்கு சொந்தமாக தண்ணீர் விநியோகிக்கும் லாரிகள் உள்ளன. இந்த நிலையில் இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்கள் தற்கொலைக்கான கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் அவர் கூறுகையில் தனது தற்கொலைக்கு தேவ்லி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் மற்றும் அவரது உதவியாளர் கபில் நாகர் ஆகியோரே காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திர சிங் எழுதியிருந்த டைரியையும் போலீஸார் கைப்பற்றினர்.
அதில் அவர் கூறுகையில் எனது டேங்கர் லாரிகளை டெல்லி குடிநீர் வாரியத்திற்கு வாடகைக்காக கொடுத்திருந்தேன். அதற்காக என்னிடம் எம்எல்ஏ ஜர்வால் லஞ்சம் கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால் எனது டேங்கர் லாரிகளை டெல்லி குடிநீர் வாரிய சேவையிலிருந்து நீக்கினார். பின்னர் எனக்கு கொலை மிரட்டலையும் விடுத்தார் என அந்த டைரியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 2 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதத்தை தொடர்ந்து போலீஸார் எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. எம்எல்ஏ ஜர்வால் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு பெண்ணை மிரட்டியதாகவும் ஒரு புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications