டெல்லி எக்ஸிட் போல்: கோட்டை விடும் ஆம் ஆத்மி! பாஜகவுக்கு வெற்றி! ஹிந்துஸ்தான் டைம்ஸ் கணிப்பு
டெல்லி: டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் எக்ஸிட் பொல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
டெல்லியை பொறுத்தவரை ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. மறுபுறம் இந்த இரு கட்சிகளுக்கும் எதிராக காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 57.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

என்னதான் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தலைநகரில் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லையே என பாஜகவுக்கு தவிப்பு இருந்து வந்தது. எனவே இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிடுவது என தீவிரமாக களப்பணியாற்றியது. மறுபுறம் ஆம் ஆத்மி தனது ஆட்சியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இவை இரண்டடையும் தவிர்த்து காங்கிரசும் முடிந்தவரை முயன்றுள்ளது. பிரசாரங்களின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தேர்தல் ஆணையத்தில் சுமார் 6,000 புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் கணிப்பின்படி,
பாஜக: 51 -60
ஆம் ஆத்மி: 10-19
காங்கிரஸ்: 00-00
என கணிப்புகள் வெளியாகியுள்ளன. தொடக்கத்திலிருந்து பாஜக இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் கணிப்புகளிலும் பாஜக பெரும்பான்மை இடத்தை பிடிப்பதாக வெளியாகியுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிவுகளில்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications