டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது.
பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
Feb 05, 2025, 5:59 pm IST
தென்கிழக்கு டெல்லியில் 32.27 சதவீதம், மேற்கு டெல்லியில் 32.27 சதவீதம் மற்றும் தென்மேற்கு டெல்லியில் 37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Feb 05, 2025, 5:48 pm IST
வடமேற்கு டெல்லியில் 33.17 சதவீதம், ஷஹ்தராவில் 35.81 சதவீதம், தெற்கு டெல்லியில் 32.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Feb 05, 2025, 5:33 pm IST
தென்மேற்கு டெல்லி 35.44 சதவீதம், புது டெல்லியில் 29.89 சதவீதம், கிழக்கு டெல்லியில் 33.66 சதவீதம், வடக்கு டெல்லியில் 32.44 சதவீதம் வாக்கு பதிவு
Feb 05, 2025, 5:24 pm IST
கடைசி 1 மணி நேரமே உள்ள நிலையில் டெல்லியில் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டாத சூழல் உள்ளது
Feb 05, 2025, 5:11 pm IST
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 48.45 சதவீத வாக்குப்பதிவு பதிவானது
Feb 05, 2025, 4:46 pm IST
4 மணி நிலவரப்படி மத்திய டெல்லியில் மிகக் குறைந்த அளவில் வெறும் 29.74 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன
Feb 05, 2025, 3:46 pm IST
டெல்லி சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Feb 05, 2025, 3:21 pm IST
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு - போலீஸ் மறுப்பு
டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், போலீசார் கெடுபிடி காட்டுவதாகவும், அவர்கள் முன்னிலையிலேயே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகவும் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு. நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும், பணம் வழங்கப்படவில்லை என டெல்லி போலீஸ் மறுப்பு.
Feb 05, 2025, 2:28 pm IST
ராஷ்டிரபதி பவன் அருகே உள்ள வாக்குச்சாவடியான நார்த் பிளாக் 27-ல் பாஜக குண்டர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு நான் சென்றதும் பாஜகவினர் அங்கிருந்து ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
अतिसंवेदनशील क्षेत्र राष्ट्रपति भवन के पास बूथ न.27 N ब्लॉक में BJP के गुंडे पैसे बाँट रहे थे मैं पहुँचा तो भाग गये। दिल्ली में चुनाव हो रहा है की मज़ाक़ हो रहा है।@ECISVEEP@CPDelhipic.twitter.com/NEIxgElyrZ
டெல்லி சட்டசபை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்.
Feb 05, 2025, 1:53 pm IST
பிரியங்கா காந்தி வேண்டுகோள்
நன்கு யோசித்து வாக்களியுங்கள் என டெல்லி வாக்காளர்களுக்கு வயநாடு எம்பி பிரியங்கா காந்தி வேண்டுகோள்
Feb 05, 2025, 12:31 pm IST
டெல்லி துக்ளக் கிரெசெண்ட் பகுதியில் உள்ள விவிஐபி வாக்குச்சாவடியில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாக்கினை செலுத்தினார்.
Feb 05, 2025, 11:48 am IST
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இர்வின் சீனியர் செகண்டரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் தந்தை ராம் கெஜ்ரிவால், தாய் கீதா தேவியுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.
Feb 05, 2025, 11:46 am IST
வரிசையில் நின்று வாக்கு செலுத்திய துணை ஜனாதிபதி
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் டெல்லி நார்த் அவென்யூவில் உள்ள சிபிடபிள்யூடி சர்வீஸ் சென்டர் வாக்குச்சாவடியில் வாக்கை செலுத்தினார். அப்போது அவர் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
டெல்லி தேர்தல் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தங்கருடன், வடக்கு அவென்யூவில் உள்ள சிபிசிடி சேவை மையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
Feb 05, 2025, 10:41 am IST
டெல்லி சட்டசபை தேர்தலில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது வாக்கினை செலுத்தினார். டெல்லி நிர்மன் பவன் வாக்குச்சாவடியில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜனநாயக கடமையாற்றினார்.
டெல்லி சட்டசபை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.1 சதவிகித வாக்குகள் பதிவு
டெல்லி சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
காலை 9 மணி நிலவரப்படி 8.1 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன
கடந்த தேர்தலை விட மூன்று சதவிகிதம் அதிகமாக 9 மணி நிலவரப்படி வாக்குகள் பதிவாகியுள்ளது
Feb 05, 2025, 9:46 am IST
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி மக்கள் போலி வாக்குறுதிகளுக்கு எதிராகவும், யமுனை நதி அசுத்தம், மதுக்கடைகள், சேதம் அடைந்த சாலைகள் அசுத்தமான குடிநீர் ஆகியவற்றிக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்த சாதனைகளை கொண்ட அரசுக்கு மக்கள் பெருமளவு வாக்களிக்க வேண்டும்.உங்களின் ஒரு வாக்கு டெல்லியை உலகின் மிகச்சிறந்த தலநகராக டெல்லியை மாற்றும்" என்று கூறியுள்ளார்.
Feb 05, 2025, 9:13 am IST
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்னதுல்லா கான் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஒக்லா தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அம்னதுல்லா கான், ஜாகிர் நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Feb 05, 2025, 9:09 am IST
ஜனாதிபதி திரெளபதி முர்மு வாக்களித்தார்
குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர சிங் தனது மனைவி சுனிதா திவேதியுடன் புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள கே காமராஜ் லேன் வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார். அப்போது அந்த வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பூத்தில், இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். காலையிலேயே வந்து வாக்களித்ததற்காக இருவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
#WATCH | #DelhiElections2025 | Indian Army Chief General Upendra Dwivedi and his wife Sunita Dwivedi click a photo at a selfie booth, after casting their vote at a polling booth at K. Kamraj Lane in the New Delhi Assembly constituency. They were also gifted saplings for being… pic.twitter.com/H8W3L66oK0
டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பத்பர்காஞ்ச் தொகுதியில் உள்ள மயூர் விஹார் பேஸ் 1 வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சச்தேவ், " டெல்லி மக்கள் பெரிய எண்ணிக்கையில் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். டெல்லியில் ஊழல் இல்லாத அரசுக்காகவும், வளர்ச்சிக்கான அரசுக்காகவும் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
#WATCH | #DelhiElection2025 | Delhi BJP President Virendraa Sachdeva and his wife show their inked fingers after casting their votes at a polling station in Mayur Vihar Phase 1 under Patparganj Assembly constituency. pic.twitter.com/NdIkdNeX8T
டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகிறார்கள். டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் இடையூறு இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
டெல்லியில் இன்று அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். முதல் முறை வாக்களிக்க செல்லும் இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். முதல் கடமையாக வாக்களியுங்கள்- பிரதமர் மோடி
दिल्ली विधानसभा चुनाव में आज सभी सीटों के लिए वोट डाले जाएंगे। यहां के मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ हिस्सा लें और अपना कीमती वोट जरूर डालें। इस अवसर पर पहली बार वोट देने जा रहे सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं। याद रखना है-…
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
Voting for #DelhiAssemblyElections begins. Eligible voters in all 70 Assembly constituencies are voting in a single-phase today; 699 candidates are in the fray.
AAP chief Arvind Kejriwal will be contesting against BJP's Parvesh Verma and Congress's Sandeep Dikshit from New Delhi… pic.twitter.com/AmC96UUhTk
அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஆவர். அதாவது, சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார். தற்போதைய முதல்வர் அதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் நிற்கிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பாஜக வலுவான போட்டியாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால், தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது.
Feb 05, 2025, 6:30 am IST
டெல்லி சட்டமன்ற தேர்தல் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
#WATCH | Delhi: Mock polling underway at a polling booth in Mayur Vihar Phase 1 under the Patparganj Assembly constituency.
அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6:30 மணிக்கு மூடப்படும்
12:04 AM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது
6:18 AM, 5 Feb
டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது
6:19 AM, 5 Feb
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது
6:19 AM, 5 Feb
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல்
6:30 AM, 5 Feb
டெல்லி சட்டமன்ற தேர்தல் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
#WATCH | Delhi: Mock polling underway at a polling booth in Mayur Vihar Phase 1 under the Patparganj Assembly constituency.
அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஆவர். அதாவது, சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார். தற்போதைய முதல்வர் அதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் நிற்கிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பாஜக வலுவான போட்டியாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால், தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது.
7:04 AM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
Voting for #DelhiAssemblyElections begins. Eligible voters in all 70 Assembly constituencies are voting in a single-phase today; 699 candidates are in the fray.
AAP chief Arvind Kejriwal will be contesting against BJP's Parvesh Verma and Congress's Sandeep Dikshit from New Delhi… pic.twitter.com/AmC96UUhTk
டெல்லியில் இன்று அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். முதல் முறை வாக்களிக்க செல்லும் இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். முதல் கடமையாக வாக்களியுங்கள்- பிரதமர் மோடி
दिल्ली विधानसभा चुनाव में आज सभी सीटों के लिए वोट डाले जाएंगे। यहां के मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ हिस्सा लें और अपना कीमती वोट जरूर डालें। इस अवसर पर पहली बार वोट देने जा रहे सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं। याद रखना है-…
டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகிறார்கள். டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் இடையூறு இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பத்பர்காஞ்ச் தொகுதியில் உள்ள மயூர் விஹார் பேஸ் 1 வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சச்தேவ், " டெல்லி மக்கள் பெரிய எண்ணிக்கையில் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். டெல்லியில் ஊழல் இல்லாத அரசுக்காகவும், வளர்ச்சிக்கான அரசுக்காகவும் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
#WATCH | #DelhiElection2025 | Delhi BJP President Virendraa Sachdeva and his wife show their inked fingers after casting their votes at a polling station in Mayur Vihar Phase 1 under Patparganj Assembly constituency. pic.twitter.com/NdIkdNeX8T
ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர சிங் தனது மனைவி சுனிதா திவேதியுடன் புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள கே காமராஜ் லேன் வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார். அப்போது அந்த வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பூத்தில், இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். காலையிலேயே வந்து வாக்களித்ததற்காக இருவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
#WATCH | #DelhiElections2025 | Indian Army Chief General Upendra Dwivedi and his wife Sunita Dwivedi click a photo at a selfie booth, after casting their vote at a polling booth at K. Kamraj Lane in the New Delhi Assembly constituency. They were also gifted saplings for being… pic.twitter.com/H8W3L66oK0
குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்னதுல்லா கான் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஒக்லா தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அம்னதுல்லா கான், ஜாகிர் நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9:46 AM, 5 Feb
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி மக்கள் போலி வாக்குறுதிகளுக்கு எதிராகவும், யமுனை நதி அசுத்தம், மதுக்கடைகள், சேதம் அடைந்த சாலைகள் அசுத்தமான குடிநீர் ஆகியவற்றிக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்த சாதனைகளை கொண்ட அரசுக்கு மக்கள் பெருமளவு வாக்களிக்க வேண்டும்.உங்களின் ஒரு வாக்கு டெல்லியை உலகின் மிகச்சிறந்த தலநகராக டெல்லியை மாற்றும்" என்று கூறியுள்ளார்.
9:51 AM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.1 சதவிகித வாக்குகள் பதிவு
டெல்லி சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
காலை 9 மணி நிலவரப்படி 8.1 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன
கடந்த தேர்தலை விட மூன்று சதவிகிதம் அதிகமாக 9 மணி நிலவரப்படி வாக்குகள் பதிவாகியுள்ளது
10:41 AM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தலில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது வாக்கினை செலுத்தினார். டெல்லி நிர்மன் பவன் வாக்குச்சாவடியில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜனநாயக கடமையாற்றினார்.
டெல்லி தேர்தல் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தங்கருடன், வடக்கு அவென்யூவில் உள்ள சிபிசிடி சேவை மையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
11:46 AM, 5 Feb
வரிசையில் நின்று வாக்கு செலுத்திய துணை ஜனாதிபதி
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் டெல்லி நார்த் அவென்யூவில் உள்ள சிபிடபிள்யூடி சர்வீஸ் சென்டர் வாக்குச்சாவடியில் வாக்கை செலுத்தினார். அப்போது அவர் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இர்வின் சீனியர் செகண்டரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் தந்தை ராம் கெஜ்ரிவால், தாய் கீதா தேவியுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.
12:31 PM, 5 Feb
டெல்லி துக்ளக் கிரெசெண்ட் பகுதியில் உள்ள விவிஐபி வாக்குச்சாவடியில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாக்கினை செலுத்தினார்.
1:53 PM, 5 Feb
பிரியங்கா காந்தி வேண்டுகோள்
நன்கு யோசித்து வாக்களியுங்கள் என டெல்லி வாக்காளர்களுக்கு வயநாடு எம்பி பிரியங்கா காந்தி வேண்டுகோள்
2:00 PM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்.
2:28 PM, 5 Feb
ராஷ்டிரபதி பவன் அருகே உள்ள வாக்குச்சாவடியான நார்த் பிளாக் 27-ல் பாஜக குண்டர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு நான் சென்றதும் பாஜகவினர் அங்கிருந்து ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
अतिसंवेदनशील क्षेत्र राष्ट्रपति भवन के पास बूथ न.27 N ब्लॉक में BJP के गुंडे पैसे बाँट रहे थे मैं पहुँचा तो भाग गये। दिल्ली में चुनाव हो रहा है की मज़ाक़ हो रहा है।@ECISVEEP@CPDelhipic.twitter.com/NEIxgElyrZ
டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், போலீசார் கெடுபிடி காட்டுவதாகவும், அவர்கள் முன்னிலையிலேயே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகவும் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு. நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும், பணம் வழங்கப்படவில்லை என டெல்லி போலீஸ் மறுப்பு.
3:46 PM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
4:46 PM, 5 Feb