ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. டெல்லியில் 49 இடங்களை பாஜக பிடிக்கலாம்.. பி-மார்க்யூ கணிப்பு
டெல்லி: டெல்லி தேர்தல் மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகளை ஒவ்வொரு தொலைக்காட்சியாக வெளியிட்டன. இதில் P-MARQ என்ற கருத்துக்கணிப்பில் பாஜக டெல்லியில் இந்த முறை ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக டெல்லி சட்டசபை தேர்தலில் இந்த முறை 39 முதல் 49 இடங்களை வெல்லும் என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 21 முதல் 31 இடங்களை பிடிக்கும் என்று P-MARQ கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் டெல்லி முதல்வராக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் அதிஷி இருந்து வருகிறார். இந்நிலையில், 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதேநேரம் வாக்குப்பதிவு சதவீதம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி இருந்தது.
டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியில் போட்டியிட்டார். முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் களம் இறங்கி உள்ளார்கள். இதில் சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார். கல்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் போட்டியிடுகிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பாஜக இந்த முறை வலுவான வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.
டெல்லி தேர்தல் மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகளை ஒவ்வொரு தொலைக்காட்சியாக வெளியிட்டன. இதில் P-Marq என்ற கருத்துக்கணிப்பில் பாஜக டெல்லியில் இந்த முறை ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக டெல்லி சட்டசபை தேர்தலில் இந்த முறை 39 முதல் 49 இடங்களை வெல்லும் என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 21 முதல் 31 இடங்களை பிடிக்கும் என்று பி-மார்க்யூ கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பூஜியம் அல்லது ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. பொதுவாகவே அண்மைக்காலங்களில் கருத்துக்கணிப்புகளும் நிஜங்களும் வேறு வேறாக இருந்து வருகிறது. எனவே வரும் 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அப்போது தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications