சுக்கு நூறாக உடைந்த ஆம் ஆத்மி கோட்டை.. டெல்லி மாளவியா நகரில் பாஜக வேட்பாளர் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மிகவும் கவனம் பெறும் தொகுதிகளில் ஒன்றாக மாளவியா நகர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் ஆம் ஆத்மி அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தது. இந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி தனது கோட்டையை தக்க வைக்குமா? இல்லை பாஜக, ஆம் ஆத்மியின் கனவை நொறுக்குமா? என்ற எதிபார்ப்பு கிளம்பியிருந்த நிலையில், ஆம் ஆத்மியின் கோட்டையை பாஜக சுக்குநூறாக உடைத்துள்ளது. பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 2,131 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

15 சுற்றுக்கள் முடிவில், மாளவியா நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 39,564 வாக்குகள் பெற்றுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பார்தி 37,433 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இதன் மூலம் பாஜக வேட்பாளரை விட 2,131 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜித்தேந்திர குமார் கோச்சர் 6,770 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். 4 ஆம் இடத்தை நோட்டா பிடித்துள்ளது. நோட்டாவுக்கு மொத்தம் 532 வாக்குகள் விழுந்துள்ளது.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. டெல்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பாஜக டெல்லியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


மாளவியா நகர் தொகுதி

டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் கடுமையான போட்டி நிலவியது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றே கணித்துள்ளன. இதனால், டெல்லியில் தாமரை மலருமா? இல்லை ஆம் ஆத்மியின் துடைப்பம் மொத்தமாக வாரி சுருட்டுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது.


3 முறை தொடர் வெற்றி

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதனால் நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ள சில தொகுதிகளின் முடிவும் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்தது. அந்த வகையில் டெல்லியில் ஆம் ஆத்மியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான மாளவியா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றியை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

மாளவியா நகர் தொகுதியில் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பார்தி இந்த முறையும் களம் கண்டார். கடந்த மூன்று தேர்தல்களிலும் இவரே இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர். கடந்த 2015 மற்றும் 2020 தேர்தல்களில் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று சோம்நாத் பார்தி வென்றார். இதனால், ஆம் ஆத்மியின் அசைக்க முடியாத கோட்டையாக இந்த இருந்தது.

பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்

இந்த தொகுதியில் பாஜக சார்பில் சதீஷ் உபாத்யாய் போட்டியிட்டார். டெல்லி பாஜக தலைவாரகாவும் இவர் இருந்துள்ளார். மாளவியா நகரில் இவரும் செல்வாக்கு மிக்கவராக உள்ளார். இதனால் கடும் போட்டி இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஜிதேந்திர குமார் கோச்சார் போட்டியிட்டார்.

மாளவியா நகர் தொகுதியை பொறுத்தவரை வர்த்தகம், தொழிலில் ஈடுபடும் மக்கள் அதிகமாக உள்ளனர். ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்களை அதிகம் கொண்ட தொகுதியாகும்.


ஆரம்பத்திலேயே பாஜக வேட்பாளர் முன்னிலை

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, ஆம் ஆத்மி கோட்டையான மாளவியா நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் முன்னிலை பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பார்தி 2 ஆம் இடத்தில் இருந்தார். இதே நிலை தான் 4 சுற்று முடிவிலும் இருந்தது. 4 சுற்றுக்கள் முடிவில், மாளவியா நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 12,555 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பார்தி 9,727 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். இதன் மூலம் பாஜக வேட்பாளரை விட 2,828 வாக்குகள் பின் தங்கி இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஜித்தேந்திர குமார் கோச்சர் 1,487 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தார். 4 சுற்று முடிவுகளில் நோட்டாவுக்கு 176 ஓட்டுகள் விழுந்து இருந்தது.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

இறுதி சுற்று முடிவில்:

8 சுற்றுகள் முடிவில், மாளவியா நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 23,415 வாக்குகள் பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பார்தி 17,759 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். இதன் மூலம் பாஜக வேட்பாளரை விட 5,656 வாக்குகள் பின் தங்கி இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஜித்தேந்திர குமார் கோச்சர் 2,718 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தார். 8 சுற்று முடிவுகளில் நோட்டாவுக்கு 315 ஓட்டுகள் விழுந்து இருந்தது.

15 வது மற்றும் இறுதி சுற்றுகள் முடிவில், மாளவியா நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 39,564 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பார்தி 37,433 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இதன் மூலம் பாஜக வேட்பாளரை விட 2,131 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜித்தேந்திர குமார் கோச்சர் 6,770 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். 4 ஆம் இடத்தை நோட்டா பிடித்துள்ளது. நோட்டாவுக்கு மொத்தம் 532 வாக்குகள் விழுந்துள்ளது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. மேலும் ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளர்கள் பலர் தோவ்லியடைந்துள்ளனர். டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+