டெல்லி தேர்தல் ரிசல்ட்: இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியது எந்த கட்சி? விவரம்
டெல்லி: ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதும் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஓக்லா, சீலம்பூர், பாபர்பூர், முஸ்தபாபாத், மதியா மஹால், பல்லிமறன், சாந்தனி சௌக், கஸ்துபாநகர், பட்லி, புது தில்லி, நங்லோய் ஜாட், சத்தர்பூர் மற்றும் பட்பர்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம். இந்த தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதும் இவர்கள்தான். இதில் வெற்றி பெற்றவர்கள் யார்? வாக்குகளை பிரித்தது யார் என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் இன்று மாலை 5.40 மணி நிலவரப்படி பாஜக, 44 தொகுதிகளை வென்றிருக்கிறது. 4 தொகுதிகளில் லீடிங்கில் இருக்கிறது. 36 தொகுதிகளை வென்றால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க முடியும். மறுபுறம் ஆம் ஆத்மி 21 தொகுதிகளை வென்றிருக்கிறது. 1 தொகுதியில் முன்னணியில் இருக்கிறது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளை பார்த்தால்,
ஓக்லா சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக சார்பில் மணீஷ் சௌத்ரி, ஆம் ஆத்மி சார்பில் அமனதுல்லா கான், காங்கிரஸ் சார்பில் அரிபா கான், ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி சார்பில் ஷிபா உர் ரகுமான் கான் போட்டியிட்டனர்.
ஆம் ஆத்மி வேட்பாளர் அமனதுல்லா கான் 88,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 65,304 வாக்குகள் பெற்று பாஜகவின் மணீஷ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸின் பெண் வேட்பாளர் அரிபா கான் வெறும் 12,739 வாக்குகள் பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். 3வது இடத்தில் எஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் இருக்கிறார்.
சீலம்பூர் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக சார்பில் அனில் குமார் சர்மா, ஆம் ஆத்மி சார்பில் சௌத்ரி சுபைர் அகமது, காங்கிரஸ் சார்பில் அப்துல் ரகுமான் போட்டியிட்டனர்.
ஆம் ஆத்மி வேட்பாளர் சௌத்ரி சுபைர் அகமது 79,009 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 36,532 வாக்குகள் பெற்று பாஜகவின் அனில்குமார் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெறும் 16,551 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
பாபர்பூர் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக சார்பில் அனில் குமார் வசிஸ்ட், ஆம் ஆத்மி சார்பில் கோபால் ராய், காங்கிரஸ் சார்பில் முகமது இஷ்ரக் கான் போட்டியிட்டனர்.
ஆம் ஆத்மி வேட்பாளர் சௌத்ரி கோபால் ராய் 76,192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 57,198 வாக்குகள் பெற்று பாஜகவின் அனில்குமார் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். 3வது இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் இஷ்ரக் கான் வெறும் 8,797 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.
முஸ்தபாபாத் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக சார்பில் மோகன் சிங் பிஷ்ட், ஆம் ஆத்மி சார்பில் ஆதில் அகமது கான், காங்கிரஸ் சார்பில் அலி மெய்தி போட்டியிட்டனர்.
பாஜக வேட்பாளர் மோகன் சிங் 85,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 67,637 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மியின் அகமது கான் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் அலி மெய்தி வெறும் 8,797 வாக்குகளை மட்டுமே பெற்று 4வது இடம் பிடித்திருக்கிறார். 3வது இடத்தில் ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் இருக்கிறார்.
மதியா மஹால் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் முகமது இக்பால் 58,120 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 15,396 வாக்குகள் பெற்று பாஜகவின் தீப்தி இந்திரா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். 3வது இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஆசிம் அமீது கான் வெறும் 10295 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.
பல்லிமறன் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் இம்ரான் உசைன் 57,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 27,181 வாக்குகள் பெற்று பாஜகவின் கமல் பக்ரி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். 3வது இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஹரூன் யூசுப் வெறும் 13059வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.
சாந்தனி சௌக் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் புனர்தீப் சிங் 38,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 22,421 வாக்குகள் பெற்று பாஜகவின் சதீஷ் ஜெயின் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். 3வது இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் முதீத் அகவர்வால் வெறும் 9,065 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.
கஸ்தூர்பா நகர் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் நீரஜ் பசோயா 38,067 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 27,019 வாக்குகள் பெற்று காங்கிரஸின் அபிஷேக் தத் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆம் ஆத்மியின் வேட்பாளர் ரமேஷ் பெஹல்வான் 18,617 வாக்குகளை பெற்று 3வது இடம் பிடித்துள்ளார்.
பட்லி சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆஹீர் தீபக் சௌத்ரி 61,192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 46,029 வாக்குகளுடன் ஆம் ஆத்மியின் ஆஜேஷ் யாதவ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் தேவேந்திர யாதவ் 41,071 வாக்குகளை பெற்று 3வது இடம் பிடித்துள்ளார்.
புது தில்லி சட்டமன்ற தொகுதி:(அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி)
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் ஹாகீர் சிங் 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 25,999 வாக்குகளுடன் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனுமாகிய சந்தீப் தீட்சித் வெறும் 4,568 வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடம் பிடித்துள்ளார்.
நங்லோய் ஜாட் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் 75,272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 49,021 வாக்குகளுடன் ஆம் ஆத்மியின் ரகுவிந்தர் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரோகித் சவுத்ரி 32,028 வாக்குகளை பெற்று 3வது இடம் பிடித்துள்ளார்.
சத்தர்பூர் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கர்தார் சிங் 80,469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 74,230 வாக்குகளுடன் ஆம் ஆத்மியின் பிரம்ம சிங் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர சிங் வெறும் 6,601 வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடம் பிடித்துள்ளார்.
பட்பர்கஞ்ச் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவி நேகி 74,060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 45,988 வாக்குகளுடன் ஆம் ஆத்மியின் அவத் ஓஜா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் 16,549 வாக்குகளை பெற்று 3வது இடம் பிடித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications