டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிகே ஒரு வித்தைக்காரர்.. டெல்லி தேர்தலால் செம சந்தோசத்தில் அறிவாலயம்.. 2021க்கு ரெடியாகும் ஸ்டாலின்!

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதும், பிரசாந்த் கிஷோரின் தேர்தல் ஆலோசனைகள் சரியான நேரத்தில் உதவியதும் திமுக தரப்பை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி எக்ஸிட் போல் முடிவுகள்... குஷியில் இருக்கும் திமுக

    டெல்லி: டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதும், பிரசாந்த் கிஷோரின் தேர்தல் ஆலோசனைகள் அக்கட்சிக்கு சரியான நேரத்தில் உதவியதும் திமுக தரப்பை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 56 இடங்களில் முன்னிலை, பாஜக 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட, முன்னிலை பெறவில்லை.

    இதன் மூலம் டெல்லியில் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகிறார். அங்கு 10 தொகுதிகளில் மட்டும் பெரிய அளவில் இழுபறி நீடித்து வருகிறது.

    டெல்லி எப்படி

    டெல்லி எப்படி

    இந்த நிலையில் டெல்லி தேர்தல் முடிவு தமிழகத்தில் திமுக தரப்பை பெரிய சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் முக்கிய காரணம். பிரசாந்த் கிஷோர்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தலில் அரசியல் ஆலோசகராக இருந்தார். அவரின் ஆலோசனைதான் அங்கு ஆம் ஆத்மி வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. கெஜ்ரிவாலும் கிஷோரை நேரில் அழைத்து இதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.

    திமுக

    திமுக

    பிரசாந்த் கிஷோர் தொட்டதெல்லாம் வெற்றி என்றுதான் கூற வேண்டும். இந்தியாவில் பிரபலமாக இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் பிரசாந்த் கிஷோர். இவர் பல மாநில கட்சிகளுக்கு நாடு முழுக்க அரசியல் ஆலோசனை வழங்கி இருக்கிறார். அதன்படி ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் வெற்றிக்கு இவர்தான் காரணமாக இருந்தார். பீகாரில் நிதிஷ் குமார் வெற்றிக்கும் இவர்தான் காரணம்.

    செம டீம்

    செம டீம்

    மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி இடைத்தேர்தலில், லோக்சபா தேர்தலிலும் வெற்றிபெற இவர்தான் காரணம். பஞ்சாப்பில் அமரிந்தர் சிங் வெற்றிபெறவும் இவர்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரிசையாக அனைத்திலும் வெற்றிபெற்றார். 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெறவும் இவர் காரணம். இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர் தனி டீம் வைத்துள்ளார். பல லட்சம் செலவில் இந்த பணிகளை இவர் கவனித்து வருகிறார்.

    வேலைகள்

    வேலைகள்

    தமிழத்தில் திமுகவிற்காக தற்போது பிரசாந்த் கிஷோர் களமிறங்கி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றியை தொடர்ந்து, அவர் திமுகவிற்காக களமிறங்கி உள்ளார். இவரின் டிராக் ரெக்கார்ட் பார்த்து திமுக பெரிய அளவில் சந்தோஷத்தில் இருக்கிறது. அதிலும் டெல்லி தேர்தல் வெற்றி திமுகவை உற்சாகப்படுத்தி உள்ளது. எப்போதும் மறைமுகமாக பணியாற்றும் பிரசாந்த் கிஷோர் நேரடியாக திமுகவிற்காக பணியாற்ற தொடங்கி உள்ளார்.

    என்ன உற்சாகம்

    என்ன உற்சாகம்

    அறிவாலயம் தரப்பு பிரசாந்த் கிஷோர் வருகை காரணமாக உற்சாகம் அடைந்துள்ளது. ஏற்கனவே திமுகவின் சோஷியல் மீடியா தளம் இவரின் வருகைக்கு பின் உற்சாகம் அடைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். 2021 தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இல்லை. அதனால் இப்போதே பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் மிக தீவிரமாக இணைந்து பணியாற்றுவார். ஸ்டாலினை தேர்தலுக்காக தயார்படுத்துவார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Delhi election results give new hope DMK chief M K Stalin after seeing Prashant Kishor's performance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X