டெல்லியில் கடந்த 3 தேர்தல்களில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் எத்தனை சதவீத வாக்குகள் பெற்றன? இதோ டேட்டா
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை ஆம் ஆத்மி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன?, எத்தனை சதவிகித வாக்குகளை பெற்றிருந்தன? என்ற முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 60.54 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8.00 மணிக்கு எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது. இடையிடையே ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே மாறி மாறி முன்னிலை நிலவரம் இருந்த நிலையில், மதியம் 12.00 மணிக்கு பிறகு பாஜகவே வெற்றி பெறும் என்ற அளவுக்கு முன்னிலை நிலவரம் மாறாமல் இருந்தது.

அதன்படியே டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லியில் 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது பாஜக. கெஜ்ரிவாலே தோற்கும் அளவுக்கு டெல்லியில் களம் மாறியிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பாஜக வென்றுள்ளது. அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் கடந்த மூன்று தேர்தல்களில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எத்தனை இடங்களில் வென்றன? பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு? என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
2013 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:
* மொத்தம் பதிவான வாக்குகள் - 66 சதவிகிதம்
* ஆம் ஆத்மி - 28 தொகுதிகளில் வெற்றி, பெற்ற வாக்கு சதவிகிதம் - 40%
* பாஜக - 31 தொகுதிகளில் வெற்றி, பெற்ற வாக்கு சதவிகிதம் - 44%
* காங்கிரஸ் - 8 தொகுதிகளில் வெற்றி, பெற்ற வாக்கு சதவிகிதம் - 11.4%
2013 சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. எனினும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. எனினும், சில மாதங்களில் தனது பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதனால் டெல்லியில் ஆட்சி கலைந்தது. இதையடுத்து சில மாதங்கள் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு 2015 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் டெல்லியில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:
* மொத்தம் பதிவான வாக்குகள் - 67.47 %
* ஆம் ஆத்மி - 67 தொகுதிகளி வெற்றி, 54.3 சதவிகித வாக்குகள் பெற்றது.
* பாஜக - 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி, 32.3 சதவிகிதம் வாக்குகள் பெற்றது.
* காங்க்கிரஸ் - 0, ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை, 9.7 சதவிகித வாக்குகள் பெற்றது.
இந்த தேர்தலில் அசுர பலத்துடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியே இல்லாத சூழல் டெல்லி சட்டசபையில் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகள் முழுமையாக கெஜ்ரிவால் அரசு ஆட்சி செய்தது.

2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:
* மொத்தம் பதிவான வாக்குகள் - 62.82 சதவிகிதம்
* ஆம் ஆத்மி - 62 தொகுதிகளில் வெற்றி, 53.57% வாக்குகள் பெற்றது.
* பாஜக - 8 தொகுதிகளில் வெற்றி, 38.51% வாக்குகள் பெற்றது.
* காங்கிரஸ் - 0, ஒரு இடங்களில் கூட வெற்றி இல்லை, 4.26% வாக்குகள் பெற்றது.
இந்த தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியே இல்லாத சூழல் டெல்லி சட்டசபையில் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்ல நேரிட்டது. இதனால் அதிஷி டெல்லி முதல்வராக பதவி வகித்தார்.
2025 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:
* மொத்தம் பதிவான வாக்குகள் - 60.54 சதவிகிதம்
* பாஜக - 48 தொகுதிகளில் வெற்றி, 45.81% வாக்குகள் பெற்றது.
* ஆம் ஆத்மி - 22 தொகுதிகளில் வெற்றி, 43.55% வாக்குகள் பெற்றது.
* காங்கிரஸ் - 0, ஒரு இடங்களில் கூட வெற்றி இல்லை, 6.36% வாக்குகள் பெற்றது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications