யார் சிறந்த சிஎம்? மக்கள் ஆதரவு கெஜ்ரிவாலுக்கு தான்! அப்போ பாஜகவில் யார் டாப்? ஆக்சிஸ் எக்ஸிட் போல்
டெல்லி: டெல்லியில் நேற்று சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் பாஜகவே இந்த முறை வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ள சூழலில், முதல்வராக யார் வர வேண்டும் என்பது குறித்த தகவல்களை ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் அதிஷி முதல்வராக உள்ள நிலையில், ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. அங்குக் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள சூழலில், 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி களமிறங்குகிறது.

மறுபுறம் இந்த முறை டெல்லியில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. போட்டி கடுமையாக இருந்த சூழலில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் சனிக்கிழமை அதாவது பிப்ரவரி 8ம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கிடையே டெல்லி தேர்தல் தொடர்பான ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அங்கு மொத்தம் 70 இடங்கள் உள்ள சூழலில் பாஜக 45-55 இடங்களிலும் ஆம் ஆத்மி 15- 25 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கெஜ்ரிவால் முதலிடம் இருக்கிறார். சுமார் 33% மக்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்துள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி மூத்த பெண் தலைவரும் தற்போதைய முதல்வருமான அதிஷிக்கு 3% பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.
மணிஷ் சிசோடியாவுக்கு 1% மக்களும் ஆம் ஆத்மியில் இருந்து இதர தலைவர்களுக்கு 5% பேரும் ஆதரவளித்துள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது
பாஜகவைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பர்வேஷ் சர்மாவுக்கு 13% பேரும், மனோஜ் திவாரிக்கு 12% பேரும் ஆதரவளித்துள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹர்ஷ் வர்தனுக்கு 9% பேரும், வீரேந்திர சச்தேவாவுக்கு 2% பேரும் ஆதரவளித்துள்ளனர். பாஜகவில் இருந்து இதர தலைவர்களுக்கு 12% பேர் ஆதரவளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைத் தேவேந்திர யாதவுக்கு 4% பேரும், இதர கட்சியினருக்கு 3% பேரும் ஆதரவளித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications