நல்ல விறைப்பு.. செம முறுக்கு.. கிட்ட போய் பார்த்தா.. மேட்டரே வேற.. பெண்ணை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
டெல்லியில் போலி பெண் போலீஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
டெல்லி: மிடுக்குடன் ரோட்டில் நின்று கொண்டிருந்த அந்த பெண் காவலரை பார்த்ததும், வாகன ஓட்டிகள் ஒரு நிமிஷம் மரியாதையுடன் ஒதுங்கியே சென்றனர்.. பிறகுதான் மேட்டரே வேறு என்று தெரியவந்தது.
நாடு முழுவது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.. அதனால் கொரோனா கட்டுப்பாடு விதிகளும் அதிகமாகவே உள்ளது.. அப்படி யாரைவது விதிகளை மீறினால் அபராதம் விதிக்கவும் போலீசார் தயங்குவதில்லை.
தற்போது தலைநகர் டெல்லியிலும் தொற்றின் வீரியம் உள்ளது.. அங்கு சாலை விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.. அப்படித்தான் ஒரு பெண் எஸ்ஐ ரோட்டில் யூனிபார்முடன் இருந்தார்.. விதிகளை மீறி யாராவது வந்தால், உடனே வண்டியை ஓரங்கட்டி ஃபைன் போட்டுவிடுவார்.. கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்கள் யார் வந்தாலும், செல்லான் கொடுத்து அபராதம் விதித்து விடுவார்.

அதற்கேற்றபடி பலரும் அவரிடம் ஃபைன் கட்டிவிட்டு சென்று கொண்டிருந்தனர்.. இந்நிலையில்தான் 2 பேர் பைக்கில் வந்தனர்.. அவர்கள் 2 பேருமே போலீஸ்காரர்கள்.. மப்ட்டியில் இருந்தனர்.. அவர்களிடமும் வழக்கம்போல வண்டியை ஓரங்கட்ட சொன்னார், ஃபைன் கட்ட சொன்னார் அந்த பெண் போலீஸ்!
இதனால் அதிர்ந்து போன அந்த போலீஸ்காரர்கள், அந் பெண்ணின் செல்லானை வாங்கி பார்த்தனர்.. அப்போதுதான் அது போலி செல்லான் என்று தெரியவந்தது.. பிறகு விசாரணை நடத்தியபோது, அந்த பெண்ணே ஒரு போலி போலீஸ் என்பது தெரியவந்தது.
டிப்டாப் டிரஸ், போலீஸ் கொண்டை, என அச்சு அசல் நிஜமாகவே பெண் போலீஸ் போலவே இருந்த அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று நிஜ போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Recommended Video
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications