நிர்வாணமாக தரையில் உருண்ட தமிழக விவசாயிகள்.. டெல்லியில் பெரும் பரபரப்பு.. பகீர் வீடியோ!
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக தரையில் உருண்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக தரையில் உருண்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
டெல்லியில் இன்று இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகிறார்கள். 4 லட்சம் விவசாயிகள் வரை போராட்ட களத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு உள்ளனர். தமிழக விவசாயிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

நிர்வாணம்
இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார்கள். ஆடைகளை அவிழ்த்துவிட்டு தரையில் விழுந்து போராடினார்கள். தரையில் உருண்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

வீடியோ வெளியானது
இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இதை பார்க்கவே பரிதாபமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. மிகவும் வயதான விவசாயிகள் கூட இப்படி போராட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி அடைந்தனர்
இதை பார்த்த டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சக மாநில விவசாயிகளும் கூட தமிழக விவசாயிகளை தடுக்க முயன்று இருக்கிறார்கள். ஆனால் தமிழக விவசாயிகள் உறுதியாக இருந்து நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

முன்னதாக
தமிழக விவசாயிகள் இன்று மாலைதான் நிர்வாண போராட்டம் நடத்த போவதாக தெரிவித்து இருந்தனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் செய்யப்படும் என்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்போதே அவர்கள் போராட்டம் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications