மழைக்கால கூட்டத்தொடர் முழுக்க.. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்த.. விவசாய சங்கங்கள் முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த மாதம் நடக்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது 3 வேளாண்சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7 மக்கள் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

Delhi: Farmers to protest in front of Parliament during the whole monsoon session

கடந்த வருடம் நவம்பர் 26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினார்கள். நாடு முழுக்க உள்ள பல்வேறு சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விவசாய அமைப்புகள் தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளன. அதன்படி நடக்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டம் நடத்தும் முடிவில் சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அமைப்பு உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாங்கள் தினமும் நாடாளுமன்றம் முன் கூட உள்ளோம். மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் வாங்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும். அதோடு எதிர்க்கட்சிகள் எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து அவையில் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

வெறுமனே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதால் எந்த பயனும் கிடையாது. விவசாய போராட்டம் குறித்து அரசு பேசும் வரை அவை நிகழ்வுகள் நடக்க கூடாது என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்தலாம் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளது.

சரியாக குறிப்பிட்ட தேதியில் பாராளுமன்றம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த முறை பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020; விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்ட (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் , 2020. ஆகிய மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+